சாம்சங் மொபைல் டிவி

மொபைல் தொழில் நுட்பத்தில் அவ்வப்போது சில புதுமைகளைக் கொண்டு வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் பிராட்பேண்ட் மொபைல் டிவி வசதி இணைந்த சாம்சங் கார்பி டிவி மற்றும் மெட்ரோ டிவி என்ற மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து இந்நிறுவன இயக்குநர் ரஞ்சித் யாதவ் கூறுகையில், ''சாம்சங் எப்போதும் தரமான புதிய தொழில் நுட்பத்தினை, தான் இயங்கும் எந்த நுகர்வோர் பிரிவிலும் அறிமுகப்படுத்தி, அதனையே தரத்தின் அடையாளமாகவும் காட்டும்.

அவ்வழியில் தற்போது இந்தியாவில் முதல் முதலாக பிராட்பேண்ட் மொபைல் டிவி இணைந்த போன்களை அறிமுகப்படுத்தி உள்ளோம்'' எனக் கூறி உள்ளார்.

சென்ற ஆண்டில் கார்பி ஸ்பீட் என்ற போனை அறிமுகப்படுத்தி, அதிவேக இன்டர்நெட் இணைப்பினை மொபைல் போனில் சாம்சங் தந்தது. இது சி.டி.எம்.ஏ. வகையில் இயங்குகிறது. இப்போது வந்துள்ள இந்த இரண்டு போன்கள் மூலம் டிவி நிகழ்ச்சியினை மக்கள் கண்டு களிக்கலாம்.

அபல்யா டெக்னாலஜிஸ் என்ற தொழில் நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இதனை சாம்சங் வழங்குகிறது. அப்போதைக்கப்போது நடக்கும் டிவி நிகழ்ச்சிகளுடன், சேமித்து வைக்கப்பட்டுள்ள காட்சிகளையும் ஒருவர் கேட்டு பார்த்து ரசிக்க முடியும்.

கார்பி டிவியில் 2.8 அங்குல வண்ணத்திரை உள்ளது. இதனுடைய பிட் ரெட் ஸ்ட்ரீமிங் வீடியோ கொண்டு வர உதவுகிறது. சி.டி.எம்.ஏ. 1 எக்ஸ் இயக்கம் மற்றும் EVDO நெட்வொர்க்குகளில் இது இயங்குகிறது. உஙஈO சர்வீஸ் தரப்படும் அனைத்து சி.டி.எம்.ஏ. நெட்வொர்க்குகளிலும் இது இயங்கும்.

கார்பி டிவி மற்றும் மெட்ரோ டிவி போன்களில் 40 லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன. இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை அப்படியே ஒளிபரப்பப்படும்போதே பார்த்து மகிழலாம். விருப்பப்பட்ட வீடியோக்களைத் தரும் 10 சேனல்களை இதன் மூலம் பெறலாம்.

கார்பி டிவி மொபைல் போன் மூலம் பல சோஷியல் நெட்வொர்க்குகளை உடனடியாகப் பெறலாம். இதன் மொபைல் பிராட்பேண்ட் திறன் 2.4 எம்.பி.பி.எஸ் ஆக உள்ளது. வீடியோ ரெகார்டிங் மேற்கொள்ள 2 எம்பி கேமரா தரப்பட்டுள்ளது.

ஒன் டச்சில் இயங்கும் 32 விட்ஜெட்டுகள், ஸ்டீரியோ எப்.எம்.ரேடியோ, 1000 எஸ்.எம்.எஸ். மற்றும் 2,000 முகவரிகளை இந்த போனில் போட்டு வைக்கலாம். இதன் மெமரியை 8 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய எஸ்.டி. கார்டினை இதில் பயன்படுத்தலாம்.

கார்பி டிவி போனில் 60 நிமிடங்கள் வரை வாய்ஸ் ரெகார்டிங் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. புஷ் மெயில் இந்த போனில் சப்போர்ட் செய்யப்படுகிறது. இந்த போனின் குறியீட்டு விலை ரூ.9,699.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes