விஜய் படங்களுக்கு வரவேற்பு! எஸ்.ஏ.சந்திரசேகர் ‌பெருமிதம்!!

விஜய் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே ‌மிகுந்த வரவேற்பு உள்ளது. அவர் எனுக்கு மகனாக கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவித்துக்‌ கொள்கிறேன், என்று விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 

எஸ்.ஏ.சந்திரசேகர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் வெளுத்துக்கட்டு. இப்படத்தின் பாடல் அறிமுக விழா ஏற்கனவே சென்னையில் நடந்துவிட்ட நிலையில், திருச்சி மற்றும் மதுரையிலும் அறிமுக விழா நடத்தப்பட்டது. இதில் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து கொண்டு பாடல்களை அறிமுகப்படுத்தி பேசினார்.

திருச்சியில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், நடிகர்களை நம்பி படம் எடுக்காமல் கதாபாத்திரத்தை நம்பி படம் எடுப்பது என்னுடைய வழக்கம். கதாபாத்திரத்தை நம்பி படம் எடுத்தால் யாரை வேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கலாம். 

படத்தில் ஏதாவது விஷயத்தை சொல்ல நினைப்பவன் நான். இப்போது படம் எடுப்பது ரொம்ப எளிது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சென்று, வெற்றி பெறுவது கடினம். இதை எப்படி சமாளிப்பது என்று திரைஉலகம் திணறி கொண்டு இருக்கிறது, என்றார். 

அதன் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஜய் எனக்கு மகனாக கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டு உள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் அரசியலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. உரிய நேரத்திற்காக அவர் காத்து இருக்கிறார். 

நான் இயக்கிய "நான் சிகப்பு மனிதன்'' படத்தை `ரீமேக்' செய்து தயாரிக்க இருக்கிறேன். அதில் விஜய்யை நடிக்க வைக்க உள்ளேன். இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நான் படத்தை மட்டும் தயாரிக்க இருக்கின்றேன். இது போன்று என்னுடைய பழைய படங்கள் சிலவற்றை இந்த காலத்துக்கு ஏற்ப `ரீமேக்' செய்ய இருக்கிறேன், என்று கூறினார்.

மதுரையில் நடந்த விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும்போது, படத்தில் பிரபல நடிகர் நடித்திருந்தாலும் நல்ல கதை இருந்தால்தான் அந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். இது தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி ஆகும். 

ஒரு கருத்தை மட்டுமே படமாக எடுக்க முடியாது. ஒரு நல்ல கருத்தை எளிமையாக கதையம்சத்துடன் இளைஞர்களை கவரும் வகையில் எடுக்க வேண்டும். இன்றைய இளைஞர்களின் தேவை தன்னம்பிக்கை. தோல்வியை தாங்கும் மனப்பக்குவம்தான், என்றார்


1 comments :

ப.கந்தசாமி at June 5, 2010 at 5:35 PM said...

நல்ல காமெடி.

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes