விண்ணைத்தாண்டி வருவாயா இந்தி ரீமேக்

விண்ணைத்தாண்டி வருவாயா படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதிலும் த்ரிஷாதான் கதாநாயகியாக நடிக்கிறார்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா நடித்த படம், விண்ணைத்தாண்டி வருவாயா. இந்தப் படம், தமிழ், தெலுங்கில் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தா நடித்திருந்தனர். தற்போது இப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து கௌதம் மேனன் கூறுகையில், இந்தியில் ரீமேக் செய்யப்படுவது உண்மைதான்.

அந்த படத்தையும் நான் தான் இயக்குகிறேன். பிரதீக் பப்பர் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்திலும் த்ரிஷா தான் கதாநாயகி. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இந்தக் கதை எந்த மொழிக்கும் சரியாக இருக்கும் என்பதால் இந்திக்கென்று எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றார்


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes