யூசர் ஏஜெண்ட்:
பயர்பாக்ஸ் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், தங்களின் இமெயில் கிளையண்ட் புரோகிராமாக, தண்டர்பேர்ட் பயன்படுத்துவார்கள். ஏனென்றால் இதுவும் மொஸில்லாவின் தயாரிப்பே. மேலும் இது பாதுகாப்பானது, பயன்படுத்த எளிமையானதும் கூட.
தண்டர்பேர்ட் புரோகிராமினை நீங்கள் பயன்படுத்துவதாக இருந்தால், இதோ உங்களுக்குப் புதிய பயனுள்ள செய்தி. உங்கள் இமெயில் ஹெடரைப் பார்த்தால், அதில் பல விஷயங்கள் தென்படும். என்னவகையான செய்தி, தேதி, இமெயிலை அனுப்பிய சர்வர் மற்றும் சில தகவல்களைக் காணலாம். இத்துடன் இன்னொரு விஷயத்தையும் இதில் சேர்க்கலாம்.
உங்கள மெயிலை அனுப்பப் பயன்படும் யூசர் ஏஜெண்ட் (User Agent) குறித்த தகவலையும் இந்த ஹெடரில் இணைக்கலாம். இந்த யூசர் ஏஜெண்ட், மெயிலை அனுப்பப் பயன்படுத்திய புரோகிராம் அல்லது சர்வீஸ் குறித்த தகவல்களை இணைக்கும். இதனால் என்ன பயன்? என்ற வினா வருகிறதா?
இந்த யூசர் ஏஜெண்ட் தரும் தகவல்களைத் தொடர்ந்து பார்த்து வரும் உங்கள் மெயிலைப் பெறுபவர்கள், நீங்கள் வழக்கமாகப் பயன்படுத்தும் சர்வீஸ் அல்லது புரோகிராம் குறித்த தகவல்களைத் தங்களை அறியாமலேயே மனதில் பதிய வைத்துக் கொள்வார்கள்.
ஏனென்றால் தொடர்ந்து மெயில்களைப் பெறுகையில், அந்த ஹெடர்களில் இருக்கும் தகவல்கள் நமக்குப் படம் போல மனதில் எப்போதும் காட்சி அளிக்கும். இதனால் நம் மின் அஞ்சல் முகவரியினைத் திருடி, அந்த இமெயில் முகவரியிலிருந்து வேறு யாரேனும் மெசேஜ் அனுப்புகையில், இந்த யூசர் ஏஜெண்ட் அதனைக் காட்டிக் கொடுத்துவிடும்.
மேலும் நாமே வேறு ஒரு புரோகிராம் மூலம் மின்னஞ்சல் அனுப்பினால், அதனைப் பெறும் நபர், இது என்ன வழக்கத்திற்கு மாறாக, வித்தியாசமான வேறுபட்ட புரோகிராமாக இருக்கிறதே என்று தெரிந்து கொண்டு, அந்த மின் அஞ்சலில் உண்மைத் தன்மை குறித்து சந்தேகப்படுவார். இது நல்லதுதானே! போலிகள் வருகையில் எச்சரிக்கையாக இருப்போம் இல்லையா!
தண்டர்பேர்ட் பயன்படுத்துபவர்கள் இந்த யூசர் ஏஜெண்ட்டைத் தங்கள் இமெயில்களில் இணைக்கக் கீழ்க்கண்ட வழிகளில் அதனை செட் அப் செய்திட வேண்டும்.
1. தண்டர்பேர்ட் புரோகிராமினைத் திறந்து கொள்ளுங்கள். பின் ஹெடர் மெனுவில் Tools > Options செல்லவும்.
2. இதில் Advanced டேப் சென்று கிளிக் செய்திடவும்.
3. பின் கிடைக்கும் விண்டோவில் வலதுபுறம் கீழாக Config Editor என்று இருப்பதில் கிளிக் செய்திடவும்.
4. இப்போது கிடைக்கும் எச்சரிக்கை செய்தியை ஏற்றுக் கொள்ளவும்.
5. இனி கிடைக்கும் கான்பிக் எடிட்டர் விண்டோவில் mailnews.headers.showUserAgent என்ற சொற்களுக்கான பில்டரை மேலாகக் காட்டியுள்ள விண்டோவில் அமைக்கவும்.
6. உடன் நேராக அந்த பாராமீட்டர் வரி கிடைக்கும். இதில் டபுள் கிளிக் செய்தால், அதன் வேல்யுTrue என மாற்றப்படும்.
இந்த மாற்றம் தேவை இல்லை எனில் மீண்டும் இதே செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
இந்த செட் அப் செயல்படுத்தப்பட மீண்டும் ஒருமுறை நீங்கள் தண்டர்பேர்ட் புரோகிராமை இயக்க வேண்டியதிருக்கும்.
காண்டாக்ட் போட்டோ:
தண்டர்பேர்ட் தொகுப்பு 3, தன் மெயில் ஹெடர்களில் அனுப்பியவர், பெறுபவர் குறித்த பல்வேறு தகவல்களைத் தருகிறது. இப்போது கூடுதலாக இன்னொரு வசதியும் இதில் கிடைக்கிறது. இதனைDisplay Contact Photo என தண்டர்பேர்ட் அழைக்கிறது. இதன் விபரங்களைப் பார்க்கலாம்.
பொதுவாக இமெயில் கிளையண்ட் புரோகிராம்களில், அட்ரஸ் புக்கில், முகவரிக்குரியவரின் புகைப்படத்தினை இணைக்கலாம். ஆனால் அவை அந்த அட்ரஸ் புக்கில் மட்டுமே காணக் கிடைக்கும். இமெயில் செய்தியில் காட்டப்படமாட்டாது.
காண்டாக்ட் போட்டோஸ் என்ற தண்டர்பேர்ட் எக்ஸ்டன்ஷன், இந்த போட்டோக்களை, சம்பந்தப்பட்டவரின் இமெயில் கிடைக்கையில் இணைத்துக் காட்டுகிறது.
தண்டர்பேர்ட் இமெயில் கிளையண்ட் புரோகிராமில், அட்ரஸ் புக்கில் உள்ள முகவரிகளில், முகவரிக்கானவரின் போட்டோவினை இணைக்கலாம். போட்டோ இல்லாதவர்கள், ஏதேனும் பொதுவான ஒரு போட்டோ அல்லது படத்தை இணைக்கலாம். எடுத்துக் காட்டாக மதுரை நண்பர் ஒருவரின் போட்டோ இல்லாத போது, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தின் படத்தை இணைக்கலாம்.
எந்த போட்டோவும் இல்லை என்றால் இந்த எக்ஸ்டன்ஷன் கிராவதார் (Gravatar) என்று சொல்லப்படுகின்ற, அனைவரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ('Globally Recognized Avatars') படங்களைத் தானாக இணைத்துக் காட்டுகிறது. இந்த கிராவதார் திட்டத்துடன் ஒருவர் அக்கவுண்ட் ஓப்பன் செய்திருந்தால், அவரின் இமெயில் கிடைக்கும்போது, அவரின் கிராவதார் படத்தைக் காட்டுகிறது.
(கிராவதார் குறித்து மேலும் விளக்கங்கள் வேண்டுவோர்en.wikipedia.org/wiki/Gravatarஎன்ற முகவரியில் உள்ள விக்கிபீடியா பக்கத்தினைக் காணவும்.) இல்லையேல் புரோகிராம் தானாக ஒரு பொதுவான படத்தைக் காட்டுகிறது.
இந்த எக்ஸ்டன்ஷனை இன்ஸ்டால் செய்திட விரும்புபவர்கள் https://addons.mozilla. org/enUS/thunderbird/addon /58034 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, எக்ஸ்டன்ஷனை இன்ஸ்டால் செய்திடவும். பின்னர், Tools > Addons > Options > Contact Photos கடணிtணிண் என்று செல்லவும்.
இங்கு செல்வதன் மூலம், அட்ரஸ் புக்கில் பதிந்து வைத்த போட்டோக்களை எடிட் செய்து அமைக்கலாம். கிராவதார்களை இங்கு அனுமதிக்கலாம் (enable or disable). போட்டோக்கள் இமெயில் மெசேஜ் கிடைக்கையில் எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்திடலாம்.
டிஸ்பிளே காண்டாக்ட் போட்டோ தண்டர்பேர்ட் பதிப்பு 3 க்கு மட்டுமே கிடைக்கிறது. எனவே இந்த வசதியைப் பயன்படுத்த விரும்புபவர்கள், தங்களுடைய தண்டர்பேர்ட் பதிப்பு, 3 ஆம் பதிப்புக்கு முந்தையதாக இருந்தால், அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.
0 comments :
Post a Comment