General Information Hostname: 121.247.11.99.chennaidynamicbb.vsnl.net.in ISP: TATA Communications formerly VSNL is Leading ISP Organization: MSC Leased line RBUDYNAMIC Proxy: None detected Type: Dialup இதன் கீழாக சிறிய மேப் ஒன்று காட்டப்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் இருக்கும் ஊர் சுட்டிக் காட்டப்படும்.
ஐ.பி.அட்ரஸ் என்ன?
இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி.(Internet Protocol) முகவரி தரப்படுகிறது. இது நான்கு எண்களின் கோவையாக, புள்ளிகளால் பிரிக்கப்பட்டு இருக்கும்.
இந்த முகவரிகள் பெரும்பாலும், இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களால், அவை இயங்கும் இடம் குறித்துத் தரப்படுவதால், இந்த முகவரி எண்ணைக் கொண்டு, இணைக்கப்படும் கம்ப்யூட்டர் இயங்கும் இடத்தைச் சொல்லிவிடலாம்.
அதன் இருப்பிடம் பொதுவான அளவில் காட்டப்படும். பூகோள ரீதியாக அதன் இருப்பிட ரேகைகள் அளவும் கண்டறியலாம். இன்டர்நெட்டில் இயங்கும் ஒவ்வொரு முறையும் ஒரு முகவரி தரப்படும். சில வகை இணைப்புகளுக்கு மட்டுமே மாறாத முகவரி எண்கள் தரப்படும்.
உங்களுடைய கம்ப்யூட்டரின் இணைய முகவரி என்ன என்று அறிய விருப்பமா? கம்ப்யூட்டரை இன்டர்நெட்டில் இயக்குங்கள். பின் http://www.whatismyipaddress.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள்.
உடன் உங்களின் கம்ப்யூட்டரின் இணைய முகவரி மட்டுமின்றி, எந்த நிறுவனம் உங்களுக்கு, எந்த வகை இணைப்பு வழங்கியுள்ளது என்றும், இருக்கும் நகரின் பெயர், அதன் பூகோள இருப்பிடம் ஆகியவையும் கீழ்க்கண்டபடி காட்டப்படும். எடுத்துக்காட்டாக ஒன்று தரப்படுகிறது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment