கம்ப்யூட்டர்களை வைரஸ்களிலிருந்து பாதுகாக்கும் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும் சைமாண்டெக் நிறுவனம், மொபைல் போன் பாதுகாப்பிற்கெனவும் தீர்வுகளை வழங்கவும் தீவிரமாக இறங்குகிறது.
மொபைல் தகவல் தொடர்பு சாதனங்கள் வேகமாகப் பரவி வருவதால், அவற்றில் வோர்ம், வைரஸ், ஸ்பைவேர் புரோகிராம்களை அனுப்பிக் கெடுக்கும் வேலையில் பலர் இறங்கியுள்ளனர். குறிப்பாக மொபைல் போன் மூலம் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் பலர் ஓப்பன் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைப் பயன்படுத்தி, ஆட் ஆன் புரோகிராம்களை டவுண்லோட் செய்கின்றனர்.
இதனால் வைரஸ் போன்ற, பாதிப்புகளைத் தரும் புரோகிராம்களை எளிதாக வடிவமைத்து, இந்த மொபைல் சாதனங்களுக்கு அனுப்பப் பலரால் முடிகிறது.
இவற்றிலிருந்து இச்சாதனங்களைப் பாதுகாக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரித்து வழங்குவதில் முனைப்புடன் இயக்க இருப்பதாக சைமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது
0 comments :
Post a Comment