நாம் இன்டர்நெட்டில் உள்ள தள முகவரிகளை அட்ரஸ் பாரில் டைப் செய்திடுகையில், http://என டைப் செய்து, பின் தள முகவரிகளை அமைக்கிறோம்.
சில பிரவுசர்களில் நாம் தள முகவரிகளை மட்டும் அமைத்தால், இந்த http:// அதில் சேர்த்துக் கொள்ளப்பட்டு, தளம் தேடப்பட்டு, நமக்குக் கிடைக்கிறது. வேர்ல்ட் வைட் வெப் வடிவமைக்கப்பட்ட காலத்திலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்த http:// இணைய தளங்களைத் தேடித் தரத் தேவையில்லை.
குரோம் பிரவுசரை வடிவமைத்தவர்கள், அந்த பிரவுசரில் இந்த முன்தொட்டு (http:// ) இல்லாமல் தங்கள் அட்ரஸ் பாரைத் தற்போது அமைத்துள்ளனர். இதனைப் பயன்படுத்துபவர்கள், http:// கொடுத்து இணைய தள முகவரியினை அமைத்தாலும், அது எடுக்கப்பட்டுவிடும்.
ஆனால் https மற்றும் ftp ஆகியவை, எடுக்கப்படவில்லை. இவை அட்ரஸ் பாரில் காட்டப்படுகின்றன. ஏனென்றால் https போன்றவை பாதுகாப்பான இணைய தளத்தைச் சுட்டிக்காட்டி தேடித்தருபவையாக இருப்பதால், இவை அப்படியே ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. http:// க்குப் பதிலாக ஐகான் ஒன்று காட்டப்படுகிறது.
இதில் சில சிக்கல்கள் உள்ளன. குரோம் பிரவுசர் தானாக http://ஐ இணைக்கிறது; ஆனால் http:// நம் கண்களுக்குக் காட்டப்படாமல், ஐகான் ஒன்று காட்டப்படுகிறது. இந்த நிலையில் ஏதேனும் ஒரு இணைய தள முகவரியினை காப்பி செய்திடுகையில் நாம் http://விடுத்து காப்பி செய்திட முடியாது.
அதனுடன் காப்பி செய்து பேஸ்ட் செய்தால், இரண்டு முறை டttணீ:// அமைந்திடும். இந்த http://இல்லாத வகையில் அட்ரஸ் அமைக்கும் மாற்றம், அண்மைக் காலத்தில் வந்துள்ள குரோம் பிரவுசர்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனை வடிவமைத் தவர்கள், இந்த மாற்றத்தை இனி மாற்றப் போவதில்லை என்று அறிவித்துள்ளனர். அதாவது இனி வரும் குரோம் பிரவுசர் பதிப்புகளில் http://இல்லாமலேயே தான் அட்ரஸ் பாரில் முகவரிகள் அமைக்கப்பட வேண்டும்.
ஆறு மாதங்களுக்கு முன்புதான், வேர்ல்ட் வைட் வெப்பினை வடிவமைத்த டிம் பெர்னர்ஸ் லீ ½ (Sir Tim BernersLee) http:// குறியீட்டில் சாய்வு கோடு குறியீடு தேவையற்றது என்று கூறி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment