தமிழகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிக்கும், காலாவதி உணவு களை விற்கும் ஓட்டல்களில் தொடர்ந்துஅதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். பெரும்பாலும் பிளாட்பார, தெருவோர, அங்கீகாரம் பெறாத ஓட்டல்கள்தான், லாபத்தை மட்டும் குறியாக வைத்து, வாடிக்கையாளர்களின் உயிரோடு விளையாடி வருகின்றன. மதுரையில் பூக்கடை, பெட்டிக்கடை நடத்த அனுமதி வாங்கி ஓட்டல்கள் நடத்திய சிலர் அண்மையில் பிடிப்பட்டனர். ஓட்டலுக்கு சாப்பிட செல்லும் போது, சுகாதாரமான ஓட்டலா என்று நாம் தெரிந்து கொள்வது அவசியம்.சுகாதாரமான ஓட்டல்களை கண்டறிவது எப்படி என்பது குறித்து, மதுரை ஓட்டல்உரிமையாளர் சங்கத் தலைவர் குமார் கூறியதாவது : குறைந்தது ஆயிரம் சதுரஅடியில் ஓட்டல் அமைவிடம் இருக்க வேண்டும். அங்கேயே தயார் செய்து, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.தினமும் தேவைப்படும் உணவுகளை, அன்றே தயார் செய்ய வேண்டும். மீதமாகும் உணவை, குப்பைத் தொட்டியில் கொட்டி விட வேண்டும். சாப்பிட்ட பின், தட்டு, டம்ளரை வெந்நீரில் சுத்தப்படுத்த வேண்டும். 'யூஸ் அண்ட் த்ரோ' கையுறை, தலைமுடி உதிராமல் இருக்க தொப்பி அணிந்த சர்வர்கள் இருக்க வேண்டும். சாப்பிடும் டேபிளை ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினி திரவத்தை கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். மதுரையில் சமீபகாலமாக, சமையல் செய்வதை நேரில் பார்த்துக் கொண்டே சாப்பிடும் வசதி சில ஓட்டல்களில் வந்துவிட்டது. விரைவில் மற்ற ஓட்டல்களிலும் இவ்வசதிஏற்படுத்தப்படவுள்ளது. மாநகராட்சி, தொழிலாளர் நலத்துறை மற்றும் வணிகவரித்துறையில் ஓட்டல்கள் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும். இதன் அடிப்படையில்தான் சுகாதாரமான ஓட்டல்கள் கண்டறியப் படுகின்றன. எங்கள் சங்கத்தில் உள்ள ஓட்டல்களுக்குசில அறிவுரைகளைஏற்கனவே வழங்கியுள் ளோம். நாட்டு காய்கறிகளை ஒரு நாள், இங்கிலீஷ் காய்கறிகளை இரண்டு நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.மாவு உட்பட பலசரக்கு சாமான்களை 15 நாட்கள் வரை வைத்திருக்கலாம். அரிசி, பருப்பு வகைகளை ஒருமாதம் வரை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்,என்றார்.
ஓட்டல்களில் சாப்பிடுபவரா நீங்கள்?
Subscribe to:
Post Comments
(
Atom
)
1 comments :
"கஹட்டோவிட்ட" தங்கள் வருகைக்கு நன்றி
Post a Comment