ஆபீஸ் 2010, வரும் ஜூன் மாதம் சில்லரை விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், பல வாசகர்கள், இந்த தொகுப்பிற்கு நாம் கட்டாயம் மாற வேண்டுமா?
இருக்கிற ஆபீஸ் தொகுப்புகள் போதாதா? அப்படி என்ன கூடுதல், அடிப்படை வசதிகள் இதில் கிடைக்கப் போகிறது? என்ற ரீதியில் கேள்விகளுடனான கடிதங்களை அனுப்பி உள்ளனர்.
இன்னும் முழுமையான ஆபீஸ் 2010 தொகுப்பு நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், சோதனைத் தொகுப்பினைப் பயன்படுத்தியதிலிருந்து சில கூடுதல் வசதிகளை அறிய, அனுபவிக்க முடிந்தது. அவற்றின் சில அம்சங்களை இங்கு தருகிறோம்.
இவை வேண்டுமா? இவற்றுக்காக 2010 தொகுப்பிற்கு அப்டேட் செய்ய வேண்டுமா என்பதற்கான பதிலை வாசகர்களே முடிவு செய்து கொள்ளலாம்.
1. போட்டோ எடிட்:
வேர்ட் 2010 அல்லது பிரசன்டேஷன் 2010 புரோகிராம்களில், புதியதாக போட்டோ எடிட்டர் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் நம் டாகுமெண்ட்களையும் பிரசன்டேஷன் காட்சிகளையும், இன்னும் அழகாகவும், பார்ப்பவர் மனதில் ஆழமான தாக்கம் ஏற்படுத்தும் வகையிலும் அமைக்க முடியும்.
போட்டோக்களை கிராப் செய்வது, கலர் காண்ட்ராஸ்ட் அமைப்பது, பிரைட்னெஸ் கொடுப்பது, தோற்றத்தினை ஷார்ப் ஆக அல்லது மிதமாக அமைப்பது, கலை நுணுக்கான எபக்டுகளை அமைப்பது போன்ற வேலைகளை இதன் மூலம் மேற்கொள்ளலாம்.
2.வீடியோ எடிட்டிங்:
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் வீடியோக்களை இணைக்கலாம். அத்துடன் அவற்றை எடிட் செய்திடும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீளமான வீடியோ கிளிப்களைத் தேவையான அளவிற்கு நறுக்கி அமைப்பது. இதன் மூலம் பைல் அளவைச் சுருக்குவது, எடுத்துச் செல்லும் வகையில் அளவைக் குறைப்பது ஆகியவற்றை இதில் மேற்கொள்ளலாம். மேலும் ஸ்லைடுகளையும் அனிமேஷன்களையும் இயக்குவதில் புதிய பல வழிகள் தரப்பட்டுள்ளன.
3. எங்கிருந்தும் எடிட் செய்திடலாம்:
ஆபீஸ் 2010 தொகுப்பில் உருவாக்கும் டாகுமெண்ட்களை விண்டோஸ் லைவ் ஸ்கை டிரைவில் போஸ்ட் செய்து, பின் எந்த இடத்திலிருந்தும், எந்த கம்ப்யூட்டர் வழியாகவும் எடிட் செய்து அப்டேட் செய்திடலாம். இதற்கு ஆபீஸ் வெப் அப்ளிகேஷன்கள் தரப்படுகின்றன. வேகமான இன்டர்நெட் இணைப்பும், உயர்ந்த திறன் கொண்ட கம்ப்யூட்டரும் இருந்தால் போதும்.
4. ஒன் நோட் 2010:
அனைத்து வகை தகவல்களையும், ஒன் நோட் 2010 (OneNote 2010) தொகுப்பில் வைத்துக் கையாளலாம். ஒருவருக்கு மேற்பட்டவர்கள் இவற்றை எடிட் செய்து, பின் இறுதியில் இணைத்துக் கொள்ளலாம். டெக்ஸ்ட், இமேஜ், ஆடியோ மற்றும் வீடியோ என எதனை வேண்டுமானாலும் இதில் பேஸ்ட் செய்து பயன்படுத்தலாம். பதிந்தவற்றை எந்த இடத்திலிருந்தும் பயன்படுத்தலாம் என்பது கூடுதல் சிறப்பு.
5.பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா:
பவர்பாய்ண்ட் தொகுப்பில் உள்ள பிராட்காஸ்ட் ஸ்லைட் ÷ஷா (Broadcast Slide Show) பயன்படுத்தி, ஒரு பிரவுசர் வழியாக எந்த ஒரு இடத்தில் உள்ளவர்களுக்கும் காட்டலாம். அவர்களிடம் இதனைக் காண பிரசன்டேஷன் பேக்கேஜ் தேவையில்லை.
6. இமெயில்களைக் கையாளுதல்:
அவுட்லுக் 2010 தரும் கான்வர்சேஷன் வியூவினைப் பயன்படுத்தி, உங்கள் இமெயில்களை சுருக்கலாம், வகைப்படுத்தலாம் மற்றும் பலவகைகளில் அவற்றைக் கையாளலாம்.
7. நிதி ஆளுமை:
எக்ஸெல் 2010 தொகுப்பு தரும் ஸ்பார்க்லைன்ஸ் (Sparklines) என்பதன் மூலம் சிறிய சார்ட்களை ஏற்படுத்தி, உங்கள் நிதி நிலையினை அவ்வப்போது கண்காணிக்கலாம். அனைத்து வகை டேட்டாவிற்கும் இதே போல் தோற்றங்களை ஏற்படுத்தி கவனிக்கலாம்.
8. நெட்வொர்க் தொடர்பு:
அவுட்லுக் 2010 தரும் சோஷியல் கனக்டர் மூலம் நாம் பயன்படுத்தும் சோசியல் மற்றும் வர்த்தக நெட்வொர்க்குகளுடன் எளிதாகத் தொடர்பு கொள்ள முடியும். இதனைப் பயன்படுத்தி மைக்ரோசாப்ட் ஷேர் பாய்ண்ட், விண்டோஸ் லைவ் மற்றும் பிற தர்ட் பார்ட்டி நெட்வொர்க்குகளுடனும் தொடர்பு கொள்ள முடியும்.
9. கட்டளைகள் கை வசம்:
ஆபீஸ் தொகுப்பில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கட்டளைகளை ரிப்பன் ஒன்றின் மூலம் விரைவாக மேற்கொள்ள வசதி தரப்பட்டுள்ளது.
இது ஒரு முன்னோட்டம் தான். இன்னும் பல புதிய வசதிகள் தொகுப்பு நமக்கு முழுமையாகக் கிடைக்கும் போது தெரியவரும். எனவே இதற்கு மாறலாமா என்பது குறித்து நம் தேவைகள் அடிப்படையிலும், புதிய வசதிகளுக்கு மாறினால் நாம் பெறும் உயர்வுகள் அடிப்படையிலும் முடிவெடுக்கலாம்
1 comments :
பயனுள்ள பதிவு. நன்றி.
Post a Comment