ஐ.பி.எல். போட்டிக்கும், நடிகர், நடிகைகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. ஷாருக்கான், ஜூஹிசாவ்லா இணைந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கி உள்ளனர்.
பஞ்சாப் அணிக்கு பிரீத்தி ஜிந்தாவும், ராஜஸ்தான் அணிக்கு ஷில்பா ஷெட்டியும் உரிமையாளர்களாக உள்ளனர். பெங்களூர் அணி வீரர்களை முன்பு கத்ரினா கைப் உற்சாகப்படுத்தினார். தற்போது தீபிகா படுகோன் அந்த வேலையை செய்கிறார்.
அக்ஷய் குமார், அமீர்கான் ஆகியோரும் அணியை பிரபலப்படுத்தும் விளம்பரங்களில் வருகிறார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களை த்ரிஷா ஸ்டேடியத்துக்கு வந்து உற்சாகப்படுத்தினார். அந்த அணியின் விளம்பர நிகழ்ச்சிக்காக விஜய்யும், நயன்தாராவும் கூட வந்து போனார்கள்.
இந்த விளம்பரத் தூதர் வரிசையில் இனி நடிகை அசினும் இடம் பெறுவார். அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் புதிய அணியான கொச்சி பங்கேற்கிறது. ரெண்டஸ்வஸ் நிறுவனம் ரூ.1500 கோடிக்கு மேல் எடுத்து கொச்சி அணியை வாங்கியது.
கொச்சி அணியை பிரபலப்படுத்த தூதுவராக அசின் நியமிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக அவருடன் அந்த அணி உரிமையாளர்கள் பேசி வருகிறார்கள். விரைவில் அசின் கொச்சி அணியின் தூதுவராக நியமிக்கப்படுகிறார். அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் அவர் கொச்சி அணி வீரர்களை உற்சாகப்படுத்துவார்.
0 comments :
Post a Comment