மைக்ரோசாப்ட் புரோகிராம்களுக்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு கம்ப்யூட்டரிலும் அடோப் நிறுவன அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருவது உறுதி. பிளாஷ் (Flash) அக்ரோபட் ரீடர் (Acrobat Reader) அல்லது ஷாக்வேவ் (Shock Wave)என ஏதாவது ஒன்றினை நாம் இன்ஸ்டால் செய்து வைத்திருக்கிறோம்.
கம்ப்யூட்டரைக் கெடுக்கும் மால்வேர் தொகுப்புகளால் இவை எளிதாகப் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக இந்த அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் பழைய பதிப்புகளை நீங்கள் பயன்படுத்திவந்தால், அவற்றில் உள்ள பலவீனமான இடங்களைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம்கள் நுழைவது எளிது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனென்றால் அப்டேட் செய்யப்பட்ட பதிப்புகளில் தான் இந்த பலவீனமான இடங்கள் சரி செய்யப்பட்டு இருக்கும். பழைய பதிப்புகள் எனில் அவை மால்வேர் புரோகிராம்கள் எளிதாக நுழைய இடம் தருவதாக அமையும்.
இதில் இன்னொரு வகை பிரச்னை என்னவென்றால், இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில், உங்கள் அடோப் பிளாஷ் பிளேயர் பழையதாக உள்ளது. அப்டேட் செய்திட இங்கே கிளிக் செய்திடுங்கள் என்று ஒரு செய்தி வரும். கிளிக் செய்தால், கம்ப்யூட்டர் முடங்கிப் போய்விடும்.
(என் சொந்த அனுபவம் இது). அல்லது பிரச்னை இருப்பதாகவும், அது குறித்த விளக்கத்தினையும், தீர்வையும் இந்த பைலில் பார்க்கலாம் என்று ஒரு பி.டி.எப். பைலுக்கான லிங்க் தரப்படும். கிளிக் செய்தால் அவ்வளவுதான். மீண்டும் ஹார்ட் டிஸ்க்கை பார்மட் செய்திடும் அளவிற்குக் கொண்டு செல்லும்.
இதிலிருந்து எப்படி தப்பிக்கலாம்? அடோப் தொகுப்புகள் மேம்படுத்தப்பட்டு கிடைப்பதாக இருந்தால், அடோப் நிறுவனத்தின் தளம் சென்று அந்த முயற்சியில் ஈடுபடுங்கள். வேறு தளங்கள் தரும், குறிப்பாக பாப் அப் விண்டோக்கள் தரும் லிங்க் மூலம் செல்ல வேண்டாம். அடோப் தளத்தைப் பார்த்து அவ்வப்போது அப்டேட் செய்திடுங்கள்.
0 comments :
Post a Comment