பயர்பாக்ஸ் மாற்றங்களுக்கான பேக் அப்

பயர்பாக்ஸ் தொகுப்பைப் பயன்படுத்து கையில் அதில் நம் விருப்பங் களுக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்துகையில் நாம்about:config சென்று அதில் ஆப்ஷன் களைத் தேர்ந்தெடுத்து அமைக்கிறோம். இதில் பல டூல்கள் தரப்படுகின்றன.

எனவே இவற்றை ஒவ்வொரு முறையும் ஏற்படுத்த முடியாது. ஏதாவது ஒரு முறை இந்த மாற்றங்களை ஏற்படுத்துகையில், இவற்றைப் பதிவு செய்திடும் பைல் கிராஷ் ஆகிவிட்டால், மீண்டும் ஒவ்வொன்றாக அமைக்க வேண்டும்.

இதற்குப் பதிலாக இந்த பைலின் பேக் அப்காப்பி ஒன்றை வைத்துக் கொண்டால், பிரச்னைகள் ஏற்படும்போது, அதனைப் பயன்படுத்தி நேரத்தை மிச்சப்படுத்தலாம். இந்த பதிவுகள் உள்ள பைலை எப்படி பேக் அப் செய்வது எனப் பார்க்கலாம்.

இதற்கு முதலில் கம்ப்யூட்டரில் மறைத்து வைக்கப்பட்டு உள்ள பைல்களைக் காட்டும் ஆப்ஷனை இயக்க வேண்டும். விண்டோஸ் எப்போதும் நம் நன்மைக்காக, பல பைல்களை மறைத்து வைக்கிறது. அவற்றைத் தவறுதலாக எடுத்து எடிட் செய்துவிடக்கூடாது என்பதற்காக அவை மறைக்கப்பட்டுள்ளன.

சில நேரங்களில் இவற்றையும் நாம் பார்க்க வேண்டியுள்ளது. அது போன்ற வேளைகளில், இந்த மறைத்துவைக்கப்பட்டிருக்கும் பைல்களைக் காட்டுமாறு விண்டோஸ் சிஸ்டத்திற்குத் தெரிவிக்க வேண்டும்.

விண்டோஸ் எக்ஸ்பியில் Tools சென்று Folder Options என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் View என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Show Hidden Filesஎன்ற வரிக்கு முன்னால் சிறிய புள்ளியை ஏற்படுத்தவும்.

விஸ்டா இயக்கத்தில் இது சற்று மாறுபடும். நேரடியாக Control Panel திறக்கவும். அதில் Folder Options என்பதைத் திறக்கவும். இங்கும் View டேப் திறந்து அதில் Show Hidden Files என்பதைத் தேர்ந்தெடுத்து முடிக்கவும். இவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் பைல்கள், மற்ற வழக்கமான பைல்களிலிருந்து வேறு வகையில் காட்டப்படும்.

விண்டோஸ் 7 சிஸ்டத்தில் நீங்கள் இயங்குவதாக இருந்தால், Search Bar CÀ Hidden Files என டைப் செய்திடவும். கிடைக்கும் கட்டத்தில் ari என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது Show Hidden Files and Folders and Drives என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக் கவும். பின் OK அழுத்தி வெளியேறவும். இனிமேல் தான் பயர்பாக்ஸ் குறித்த வேலையே இருக்கிறது.

முதலில் இந்த about:configசெயல்பாடுகளைக் குறித்து வைக்கும் பைலை அணுக வேண்டும். இதற்கு விண்டோஸ் எக்ஸ்புளோரரில் \Documents and Settings\\Application Data\Mozilla\Firefox\Profiles\.default\ என்றபடி கட்டளை அமைத்து என்டர் செய்திடவும்.

இதில் யூசர் நேம் என்பது உங்கள் கம்ப்யூட்டரில் யூசர் நேமாகப் பயன்படுத்தும் பெயர். இந்த இடத்தை அடைந்தவுடன் prefs.js என்ற பைலைத் தேடிக் கண்டுபிடிக்கவும். இதில் தான் பயர்பாக்ஸ் ஆப்ஷன்ஸ் தேர்வுகள் அனைத்தும் பதியப்பட்டிருக்கின்றன.

இதனை காப்பி செய்து இன்னொரு பாதுகாப்பான டிரைவில் வைத்துக் கொள்ளவும். இது சரியாக வேலை செய்திடுமா என்ற கவலை இருந்தால், பயர்பாக்ஸ் திறந்து அதில் about:config கிளிக் செய்து, தேவையற்ற மாற்றங்களை ஏற்படுத்தவும்.

தாறுமாறான மாற்றங்கள் இருந்தால், நீங்கள் எதிர்பார்த்தபடி பயர்பாக்ஸ் இயங்காது. இந்நிலையில் ஏற்கனவே காப்பி செய்த prefs.js பைலை, மேலே கொடுத்த டைரக்டரியில் பேஸ்ட் செய்து இயக்கிப் பார்க்கவும். மாற்றங்கள் ஏற்படுத்துவதற்கு முன்பு இருந்த மாற்றங்களுடன் பயர்பாக்ஸ் மீண்டும் செயல்படும்.

விண்டோஸ் கிராஷ் ஆகி, மீண்டும் பயர்பாக்ஸை நிறுவும் வேலையை மேற்கொண்டாலும், இந்த பைல் அப்போது நம் விருப்பங்களை செட் செய்திட உதவும்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes