மொபைல் சேவைச் சந்தையில் புதிதாக இறங்கியுள்ள வீடியோகான் நிறுவனம், பிரி பெய்ட் திட்டத்தில் புதிய கட்டணச் சலுகையினை வழங்குகிறது.
இதன்படி ரூ.99 செலுத்தி 900 நிமிடங்கள் பேசும் வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது. ஒரு நிமிடத்திற்கு 10 பைசா என்ற அளவில் இது இருக்கும். இதனால் பிரி பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக இரண்டு மடங்கு பேசும் நேரம் கூடுதலாகக் கிடைக்கிறது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 30 நிமிடங்கள் பேசுவோருக்கு மாதம் ரூ.100 இதன் மூலம் சேமிப்பாகும். ஏற்கனவே முதல் எஸ்.எம்.எஸ். செய்திக்கு ரூ.1ம், அடுத்த செய்திகளுக்கு ஒரு பைசாவும் வசூலிக்கும் திட்டத்தினை வீடியோகான் அமல்படுத்தியுள்ளது.
மேலும் ரூ.399, ரூ.149, ரூ.101 மற்றும் ரூ.61 செலுத்தி, ஒரு நொடிக்கு ஒரு பைசா என்ற எஸ்.டி.டி. வசதியையும் வீடியோகான் மொபைல் சர்வீஸ் தருகிறது.
0 comments :
Post a Comment