இரண்டு விநாடி பேசினால் ஒரு பைசா என்ற அளவில் தன் ஜி.எஸ்.எம். வாடிக்கையாளர் களுக்கு கட்டணத்தைக் குறைத்துள்ளது வெர்ஜின் மொபைல்.
ரூ.45 கட்டணத்தில் இந்த திட்டத்தில் நுழைந்தால், ஒரு மாதத்திற்கு இச்சலுகையை அனுபவிக்கலாம். மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்த திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளதாக இந்நிறுவன தலைமை அதிகாரி மதுசூதன் அறிவித்துள்ளார்.
எஸ்.டி.டி. அழைப்புகளுக்கு ஒரு நிமிடத்திற்கு 20 பைசாவும், மற்ற நெட்வொர்க் குடன் பேசுகையில் உள்ளூர் அழைப்புகளுக்கு 40 பைசாவும், எஸ்.டி.டி. அழைப்பு களுக்கு 50 பைசாவும் கட்டணம் வசூலிக்கப் படுகிறது.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, ஒரிசா, மும்பை, மஹாராஷ்ட்ரா மண்டலங்களில் ஜி.எஸ்.எம். வாடிக்கை யாளர்களுக்கு இந்த திட்டங்கள் அமல் படுத்தப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment