வேர்டில் டாகுமெண்ட்டைத் திறந்து கொள்ளுங்கள். மேலே உள்ள மெனு பாரில் ab என்ற சிறிய எழுத்துக்களுடன் ஒரு கட்டம் தென்படும். இதுதான் ஹைலைட் செய்திடும் டூல். இதன் ஓரத்தில் ஒரு சிறிய தலைகீழ் அம்புக் குறி இருக்கும்.
இதில் கிளிக் செய்தால், எந்த வண்ணத்தில் ஹைலைட் செய்திட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். பின் இதில் கிளிக் செய்தால் ஹைலைட்டர் பேனா போன்ற ஒரு கர்சர் கிடைக்கும். வழக்கமான கர்சரும் அதன் இடத்தில் இருக்கும்.
இந்த ஹைலைட் கர்சரைக் கொண்டு, எந்த சொற்களை ஹைலைட் செய்திட வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அவை ஹைலைட் செய்யப்படும். இந்த ஹைலைட் டூலை ஆப் செய்திட, எஸ்கேப் கீ அழுத்தலாம். அல்லது ab கட்டத்தில் மீண்டும் கிளிக் செய்திடலாம்.
ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் திரையில் தோன்றும் காட்சியில் மட்டும் இருக்காது. இந்த டாகுமெண்ட்டை அச்சடிக்கக் கொடுத்தால், உங்களிடம் கலர் பிரிண்டர் இருந்தால், இதே கலரில் சொற்கள் ஹைலைட் செய்யப்பட்டு அச்சாகும்.
கருப்பு வண்ண பிரிண்டர் எனில், ஹைலைட் செய்யப்பட்ட பகுதிகள் கிரே கலரில் வெளிறிப் போய் இருக்கும். எனவே நீங்கள் கருப்பு வெள்ளை பிரிண்டரைப் பயன்படுத்துவதாக இருந்தால், இந்த ஹைலைட் செய்த பகுதிகளை நீக்கிவிடுவது நல்லது. இதற்கு ஹைலைட் செய்த பகுதியைத் தேர்ந்தெடுத்து, முன்பு சொல்லப்பட்ட அந்த ab கட்டத்தில் கிளிக் செய்தால் போதும்.
0 comments :
Post a Comment