மாருதி சுசூகி நிறுவனத்தின் புதிய, 'வேகன் ஆர்' காரின் விற்பனையை அதிகரிக்க, அதன் சிறப்பம்சங்கள் குறித்த தகவல்களை, அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: மாருதி சுசூகியின் புதிய, 'வேகன் ஆர்' காரில், ஏராளமான சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. அந்த காரின் ஒட்டு மொத்த நீளம், 3,595 மி.மீ., ஆகவும், அவற்றின் அகலம் மற்றும் உயரமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய, 'வேகன் ஆர்' காரில் கால் வைக்கும் பகுதியில் தாராளமான இட வசதி நிறைந்துள்ளது. இந்த காரில், புதிய கே-சீரிஸ் வகை இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
வசதிக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, முன் இருக்கை, உயரமானவர்களுக்கு சவுகரியமளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய, 'வேகன் ஆர்' கார், உயர் தரமான பாதுகாப்பு வசதிகள் நிறைந்து காணப்படுகிறது.
இந்த கார் சுற்றுச்சூழலுக்கு உகந்த தூய்மையான எரிபொருள் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்வகை கார், ஏழு வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment