நாள்தோறும் புதிது புதிதாய் பல மொபைல்கள் சந்தைக்கு வந்து வாடிக்கையாளர்களின் மதிப்பைப் பெற்று வருகின்றன. பல நிறுவனங்கள் வடிவமைப்பில் பல மாற்றங்களை அமைத்து, கூடுதல் வசதிகளைக் கட்டுப்படியாகும் விலையில் வழங்கி வருகின்றன. விரைவில் சந்தைக்கு வர இருக்கும் சில போன்களை இங்கு காணலாம்.
நோக்கியா எக்ஸ் 3:
நோக்கியாவின் இந்த ஸ்லைடர் போன் முதன் முதலாக நோக்கியா ஓ.வி.ஐ. ஸ்டோர் சப்போர்ட் தரும் வøகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நோக்கியா 5530 எக்ஸ்பிரஸ் மியூசிக் மொபைல் போனைப் போன்ற வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் 2.2 அங்குல வண்ணத்திரைக்குக் கீழாக, மியூசிக் கண்ட்ரோல் செய்திடும் பட்டன்கள் தரப்பட்டுள்ளன. 3.2 மெகாபிக்ஸெல் டிஜிட்டல் ஸூம் கேமரா, எல்.இ.டி. பிளாஷ், வீடியோ பிளேபேக் மற்றும் ரெகார்டிங், 70 எம்பி மெமரி மற்றும் 16 ஜிபி வரை மெமரி அதிகப்படுத்தும் திறன் கொண்ட மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், A2DP இணைந்த புளுடூத் 2.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், ஆர்.டி.எஸ். கொண்ட எப்.எம். ரேடியோ எனப் பல வசதிகளைக் கொண்டுள்ளது.
இன்டர்நெட் இணைப்பு வழங்க எட்ஜ் தொழில் நுட்பம் பயன்படுத்தப் படுகிறது. இந்த போனின் பரிமாணம் 96.0 x 49.3 x 14.1 மிமீ ஆக உள்ளது. எடை 103 கிராம். இதன் உத்தேச விலை ரூ.15,000.
சாம்சங் எஸ் 5550:
இந்த மொபைல் போனின் விலையும் நோக்கியா எக்ஸ்3 போன் விலையை அடுத்து (ரூ.15,000) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வடிவமைப்பு மற்றும் வசதிகளைப் பொருத்தவரை நோக்கியா போனை மிஞ்சுகிறது.
3ஜி சப்போர்ட், புளுடூத், பவர் எல்.இ.டி. கொண்ட 5 எம்பி கேமரா, வீடியோ பிளே அண்ட் ரெகார்டிங், மியூசிக் பிளேயர், 110 எம்பி மெமரி, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், டிவி அவுட்புட், ஸ்டீரியோ எப்.எம்., A2DP இணைந்த புளுடூத் 2.1, 3.5 மிமீ ஆடியோ ஜாக், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், ஜாவா ஸ்ட்ரீமிங் இணைந்த நெட்வொர்க் இணைப்பு என நவீன வசதிகள் அனைத்துக் கொண்டதாக கருப்பு மற்றும் இளஞ்சிகப்பு வண்ணங்களில் கிடைக்கிறது.
நோக்கியா 5730:
சிம்பியன் எஸ் 60 சிஸ்டத்தில் இயங்கும் இந்த நோக்கியா 5730 எக்ஸ்பிரஸ் மியூசிக் மொபைல் போன் விலையும் ஏறத்தாழ ரூ.15,000 ல் இருக்கலாம். 2.4 அங்குல வண்ணத்திரை, 3 மெகாபிக்ஸெல் கேமரா, எல்.இ.டி. பிளாஷ், கார்ல் ஸெய்ஸ் லென்ஸ், உள்ளிணைந்த ஜி.பி.எஸ். வை–பி இணைப்பு, மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஸ்லாட், ஆடியோ 3.5 மிமீ ஜாக், 100 எம்பி மெமரி, 8 ஜிபி வரை அதிகப்படுத்தக் கூடிய மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், எம்பி3 பிளேயர், எப்.எம். ரேடியோ, 3ஜி வசதி, வை–பி, புளுடூத் ஆகிய வசதிகளைக் கொண்டதாக இது அமைந்துள்ளது.
0 comments :
Post a Comment