“கிளாஷ் ஆப் டைட்டான்ஸ்” என்ற ஆங்கில படம் தமிழில் “மர்மதேசம்” என்ற பெயரில் வந்துள்ளது. கடவுளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தமே கதை.
பாதாள உலகின் கடவுளான ஹேட்ஸ் படைகள் பூமியை கைப்பற்ற வருகிறது. அதை எதிர்க்க முடியாமல் மன்னர்களும் மக்களும் புற முதுகிட்டு ஓடுகிறார்கள். அப்போது கடவுளாக பிறந்து மனிதனாக வளர்க்கப்பட்ட பெர்சுயஸ் உலகை காப்பாற்ற புறப்படுகிறான். சிறு படையின் உதவியுடன் ஹேட்ஸ் வீரர்களை சின்ன பின்னமாக்குவது கிளை மாக்ஸ்...
பயமுறுத்தும் மிருகங்கள், பாதாள உலக பேய்கள் பறக்கும் குதிரைகள் என படம் முழுக்க விழிகளை விரிய வைக்கும் வியப்பூட்டும் காட்சிகள். ராட்சத தேள்கள் மேல் பயணித்து வவ்வால் மனிதர்களிடம் இருந்து பெயர்சுயஸ் ஆக வரும் சாம்வொர்த்திங்டன் தப்பும் சீன் பரபர...
மாறுவேடத்தில் கள்ள உறவு, பேழையில் வைத்து மனைவி, குழந்தையை கடலில் வீசுதல் போன்றவை நம்மூர் புராண கதைகளை நினைவூட்டுகின்றன. லூயிஸ் லெட்டிரியர் இயக்கி உள்ளார்.
0 comments :
Post a Comment