வேர்டில் தொடர்ந்து டாகுமெண்ட்களை உருவாக்கி சேர்த்து வைக்கிறோம். அந்த டாகுமெண்ட்டில் உள்ள தகவல்கள் ஏதேனும் நாட்களைக் குறிப்பிட்டாலும் டாகுமெண்ட் உருவாக்கப்பட்ட நாள் நமக்குப் பல வேளைகளில் தெரிய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
வேர்ட் தொகுப்பே நாம் எப்போது டாகுமெண்ட்டை உருவாக்கினோம் என்பதைத் தானாகவே அமைத்துக் கொண்டால் நம் வேலை மிச்சமாகும். கீழே கொடுக்கப்பட்டுள்ளபடி இதனை செட் செய்திடலாம்.
1. முதலில் "Insert" கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் Fieldஎன்பதனைத் தேர்தெடுக்கவும்.
2. Field டயலாக் பாக்ஸ் கிடைத்தவுடன் கீழாக ஸ்குரோல் செய்து சென்று Create Date என்பதில் கிளிக் செய்திடவும்.
3. அதன் கீழாக உள்ள Date Formatsஎன்பதில் எப்படி நேரம் மற்றும் தேதி காட்டப்பட வேண்டும் என்பதையும் செட் செய்திடவும்.
4. இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அன்றைய தேதி, நேரம் இணைக்க: தேதியையும் நேரத்தினையும் டாகுமெண்ட் ஒன்றில் சேர்க்க அதனை டைப் செய்ய வேண்டியதில்லை. இதற்கு முதலில் "Insert" கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் மெனுவில் Date and Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் எந்த பார்மட்டில் தேதியும் நேரமும் வேண்டுமோ அதனை செட் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்திடவும்.
இதில் உள்ள இன்னொரு சிறப்பு அம்சம் என்னவென்றால் இந்த டயலாக் பாக்ஸில் உள்ள "Update automatically ” என்பதில் டிக் அடித்து தேர்ந்தெடுத்துவிட்டால் ஒவ்வொரு முறை டாகுமெண்ட்டைத் திறந்து திரும்ப சேவ் செய்திடுகையில் அப்போதைய தேதி மற்றும் நேரம் அப்டேட் செய்யப்படும்.
0 comments :
Post a Comment