எல்லா அப்ளிகேஷனுக்கும் அப்டேட்

விண்டோஸ் சிஸ்டம் பயன்படுத்துபவர்கள் கட்டாயம் செய்ய வேண்டியது, மைக்ரோசாப்ட் நிறுவனம் அளிக்கும் பேட்ச் பைல்களைக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்வதுதான். 


அது மட்டுமின்றி இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் மற்றும் பிற அப்ளிகேஷன் புரோகிராம் களும் அவ்வப்போது பேட்ச் பைல் மூலம் அப்டேட் செய்திட வேண்டியுள்ளது. அப்படியானால் நாம் எத்தனை பைல்களுக்கான அப்டேட் பைல்களைக் கண்காணிக்க முடியும். 


எம்பி3, வீடியோ, தொலைபேசி, டிவி ட்யூனர், கேமரா மற்றும் மொபைல் இணைப்பிற்கான அப்ளிகேஷன் கள் என அனைத்தையும் நாம் கண்காணித்து அப்டேட் செய்வது எளிதா என்ன? சில வேளைகளில் இது போன்ற புரோகிராம்களுக்கு அப்டேட் இருப்பதாகச் சொல்லி, நம்மை ஒரு குறிப்பிட்ட தளத்திற்கு அழைத்துச் சென்று வைரஸ்களை நம் கம்ப்யூட்டருக்குள் தள்ளிவிடும் போலி புரோகிராம்களும் நிறைய உண்டு. 


இதற்கெல்லாம் விடிவாக நமக்கு ஒரு புரோகிராம் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர்Secunia PSI. (PSI Personal Software Inspector)  இதனை என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். 


இந்த புரோகிராம் நம் கம்ப்யூட்டரில் உள்ள பழைய புரோகிராம்களுக்கு அவற்றின் நிறுவனங்கள் அப்டேட் தந்தாலும் தரவிட்டாலும், செகுனியா அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. ஸ்கேன் செய்த பின் பாதுகாப்பற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் என ஒரு பட்டியலை நமக்கு அளிக்கிறது. 


எந்த புரோகிராம்களுக்கெல்லாம் அப்டேட்டட் பைல்கள் உள்ளனவோ அவற்றின் லிங்க்குகளைப் பட்டியலிட்டு தருகிறது. இந்த லிங்க்குகளில் கிளிக் செய்து நம் கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்களை அப்டேட் செய்து கொள்ளலாம். இவற்றுடன் எந்த புரோகிராம்களுக்கு அப்டேட் பைல்களை அவற்றைத் தயாரித்து அளித்த நிறுவனங்கள் தரவில்லையோ அவற்றையும் சுட்டிக் காட்டுகிறது. 


செகுனியா சிஸ்டம் தொடங்கும்போதே இயங்கி, கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து புரோகிராம்களையும் ஸ்கேன் செய்கிறது. புதிய புரோகிராம்கள் இருந்தால் அவற்றிற்கான அப்டேட் பைல்களை ஆய்வு செய்கிறது. புரோகிராம்களில் ஆபத்து விளைவிக்கக் கூடிய வகையில் கோட் இருந்தால் அதனையும் சுட்டிக் காட்டுகிறது. 


செகுனியா பி.எஸ்.ஐ. கம்ப்யூட்டரில் உள்ள ஆண்ட்டி வைரஸ் அல்லது பயர்வால் புரோகிராம்களுக்குப் பதிலியாகக் கொள்ள முடியாது. ஆனால் இவை மேற்கொள்ளாத ஒரு முக்கிய வேலையை மேற்கொண்டு நம் கம்ப்யூட்டரைப் பாதுகாக்கிறது. 


இந்த அருமையான பாதுகாப்பு புரோகிராமினைhttp://secunia.com/vulnerability_scanning/personal/  என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாக டவுண்லோட் செய்து கொள்ளலாம். சென்ற ஆகஸ்ட் மாதம் இதன் அண்மைக் காலத்திய பதிப்பு வெளியானது. 


பதிப்பு எண் 1.5.0.1. இதன் பைல் சைஸ் 716,320 bytes ஆகும். 18 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு நாளில் சராசரியாக இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 3,228.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes