உலக அளவில், ஆண்டுக்கு 110 கோடி செல்போன் சாதனங்கள் உற்பத்தி ஆகின்றன. இதில், இந்தியாவில் மட்டும் தயாரிக்கப்படும் செல்போன் சாதனங்களின் அளவு 10 சதவீதம் ஆகும். நாட்டில் ஆண்டுக்கு 12 கோடி செல்போன் சாதனங்கள் தயாராகின்றன.
கடந்த 2006-ஆம் ஆண்டில், இந்தியாவில் ஆண்டு செல்போன் உற்பத்தி திறன் 3.10 கோடி என்ற எண்ணிக்கையாக இருந்தது.
இந்த எண்ணிக்கை 2011-ஆம் ஆண்டில் 10.70 கோடி டன்னாக உயரும் என சர்வதேச தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் கார்ட்னர் கடந்த 2007-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் முன்னறிவிப்பு செய்திருந்தது.
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே இந்த உற்பத்தி தற்போது 12 கோடியாக அதிகரித்துள்ளது. ஆக, செல்போன் உற்பத்தியில் இந்தியா இலக்கை விஞ்சி சாதனை படைத்துள்ளது. இந்த உற்பத்தியை வரும் 2012-ஆம் ஆண்டிற்குள் 25 கோடியாக உயர்த்த இந்திய செல்போன் சாதனங்கள் தயாரிப்பு சங்கம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
மேலும், வரும் 2012-ஆம் ஆண்டிற்குள் 10 கோடி செல் போன் சாதனங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக இச்சங்கத்தின் பிரசிடெண்ட் பங்கஜ் மோகிந்ரோ தெரிவித்தார்.
0 comments :
Post a Comment