எக்ஸ்மேன்-4 சினிமா விமர்சனம்
எக்ஸ்மேன்-4 ஆங்கில படம் தமிழில் விடாக்கண்டன் கொடாக்கண்டன் பெயரில் வந்துள்ளது.
ஹக்ஜேக்மேன், லைவ்ஸ் கிரைபர் இருவரும் அபூர்வ சக்தி படைத்த சகோதரர்கள். இதுபோன்ற வித்தியாசமான பலசாலிகளை சேர்த்து புதுப்படைப்பிரிவை துவக்குகிறார் டேனி. அவர்கள் மூலம் உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிடுகிறார்.
அவரது சதி ஹக்ஜேக் மேனுக்கு தெரிய அந்த குழுவில் இருந்து விலகுகிறார். இதனால் அண்ணன்- தம்பிக்குள்ளேயே சண்டை மூட்டுகிறார். காதலி மற்றும் நண்பர்களை அழித்த அண்ணனை பழிவாங்க ஹக் வெறியாகிறார். அப்போது டேனி தந்திரமாக உதவ வருகிறார்.
ஹக்குக்கு புதிய சக்திகளை கொடுத்து மீண்டும் தனது அடிமையாக்க முயல்கிறார். அதிலிருந்து தப்பும் ஹக்கை கொல்ல சகோதரனையே நாடுகிறார். இருவருக்கும் பலத்த சண்டை நடக்கிறது. டேனி சதித்திட்டம் நிறைவேறியதா என்பது கிளை மாக்ஸ்...
கூர்மையான நீள நகங்களுடன் வரும் ஹக் படம் முழுக்க அதிரடி சாகசம் செய்கிறார். சிறுவயதிலேயே கொலைகார தந்தையை கொன்று காட்டுக்குள் ஓடுவது விறுவிறுப்பு. பலசாலிகளான சகோதரர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிவதும் அவர்களுக்குள் சண்டை மூள்வதும் எதிர்பாராதது.
டேனியிடம் இருந்து ஹக் தப்புவதும் இருவருக்கும் நடக்கும் சண்டைகளும் பிரமாண்ட யுத்தம். ஹெலிகாப்டர் வெடித்து சிதறுவது, கார் தீப்பிடித்து எரிவது, உயரமான கட்டிடத்துக்குள் நுழைந்து நடக்கும் சண்டைகள் பிரமிக்க வைக்கின்றன. கிளைமாக்ஸ் ஆக்ஷன் மாயாஜல மோதல்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment