எறும்புகளுக்கு மிகச்சிறிய அளவிலேயே மூளை இருக்கின்றன. ஆனால், அவை உணவு தேடி இருப்பிடத்தில் இருந்து செல்லும் போது வழியில் உள்ள அடையாளங்களை தன் மூளையில் பதிய வைத்துக் கொள்கின்றன. மீண்டும் இருப்பிடத்திற்கு திரும்பும் போது அந்த அடையாளங்களை சரிபார்த்துக் கொள்கின்றன. இவ்வாறு படங்கள் போன்று, அடையாளங்களை எறும்புகள் பதிய வைத்துக் கொள்ளும் இந்த திறன், ரோபாட்கள் தானே இயங்கும் வகையில் வடிவமைக்க உதவிகரமாக இருக்கும். இவ்வாறு ருடிகர் வென்னர் கூறினார்
ரோபாட்களுக்கு கைகொடுக்கும் எறும்புகள்
மூளையில், உருவங்களை பதிய வைத்துக் கொள்ளும் எறும்புகளின் திறன், தானே இயங்கும் வகையிலான ரோபாட்கள் செய்ய உதவிகரமாக இருக்கும்' என, சூரிச் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம், பெங்களூரில், நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சூரிச் பல்கலைக்கழகத்தின் மூளைகள் பற்றி ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த பேராசிரியர் ருடிகர் வென்னர் கூறியதாவது: எறும்புகளுக்கு சிறப்பான பார்வை திறன் உள்ளது. இதனால், அவை வானத்தை மிக தெளிவாக பார்க்க முடிகிறது. வானம் தான், அந்த எறும்புகளுக்கு திசைகாட்டும் கருவியாக பயன்படுகிறது.
எறும்புகள் இரை தேடி தன் இருப்பிடத்தை விட்டு வெளியில் வருகின்றன. உணவு கிடைத்ததும், வானத்தில் இருந்து வரும் ஒளிக்கற்றைகளை அடிப்படையாக கொண்டு தான் வந்த பாதையிலேயே, ஒரே நேர்கோட்டில் மீண்டும் தன் இருப்பிடத்தை சென்றடைகின்றன.
அந்த எறும்புகளுக்கு பார்வை கோளாறு ஏற்பட்டால், அவை தன் பாதையில் தவறு செய்கின்றன. வானத்தின் ஒளிக்கற்றைகளை மட்டும் கணக்கில் கொள்ளாமல், தான் வந்த பாதையின் அடிக் கணக்கையும் அவை கணக்கில் கொள்கின்றன.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment