ரிலையன்ஸ் நிறுவனம் செல்போன் கட்டணங்களை பெருமளவு குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன்படி நீண்ட நேர பேச்சுக்கான கட்டணம் 3 நிமிஷத்துக்கு ரூ. 1 ஆக நிர்ணயித்துள்ளது.
இதன் மூலம் 30 சதவீத அளவுக்கு கட்டண சலுகையை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய சலுகை நவம்பர் 5-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதன்படி மூன்றுவகையான கட்டணங்களை ரிலையன்ஸ் நிர்ணயித்துள்ளது.
அதாவது குறைந்த நேர பேச்சு, நீண்ட நேர பேச்சு, ஒரே அளவிலான பேச்சு ஆகிய மூன்றுக்கும் வெவ்வேறு விதமான கட்டண விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
குறைந்த நேர பேச்சுகளுக்கு ஒரு விநாடிக்கு ஒரு காசு கட்டணமும், நீண்ட நேர அழைப்புகளுக்கு 3 நிமிஷத்துக்கு ஒரு ரூபாய் கட்டணமும், ஒரே அளவிலான பேச்சுக்கு ஒரு 60 விநாடிக்கு 50 காசு கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியை ஜிஎஸ்எம் மற்றும் சிடிஎம்ஏ வாடிக்கையாளர்களும் பெறலாம் என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது
0 comments :
Post a Comment