பி.எஸ்.என்.எல்., வர்த்தகத்தை அதிகரிக்க, சென்னை தொலைபேசியில் புதிய சேவை துவங்கப்பட்டுள்ளது.
சென்னைத் தொலைபேசியின் கீழ் வாடிக்கையாளர் சேவை மையம் மற்றும் ஏஜன்டுகள் மூலம் தொலைபேசி மற்றும் மொபைல் போன் விற்பனை, இன்டர்நெட் இணைப்பு, ரீ சார்ஜ் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தற்போது, பி.எஸ்.என்.எல்., இந்த வர்த்தக சேவையை விரிவாக்கம் செய்துள்ளது. 'என்டர்பிரைஸ் பிசினஸ் சேனல் பார்ட்னர்' எனும் பெயரில் அனுபவம் வாய்ந்த ஏழு நபர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 11ம் தேதி பயிற்சி வழங்கியது.
சிறிய மற்றும் பெரிய நிறுவனங்கள், அதிக எண்ணிக்கையில் இணைப்பு தேவைப்படுவோர் உள்ளிட்டோரை அணுகி, அவர்களது தேவையை இவர்கள் நிறைவேற்றவுள்ளனர். இந்த சேவை முதல்கட்டமாக சென்னை தொலைபேசியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நாடு முழுவதும் விரிவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இலக்கு நிர்ணயித்து, புதுமையான செயல்பாடுகளை பி.எஸ்.என்.எல்., வழங்கவுள்ளது.
பி.எஸ்.என்.எல்., சாதனங்களை உபயோகிக்க பலரையும் கொண்டு வருவது, அவர்களைத் தக்க வைத்துக் கொள்வது போன்ற நடவடிக்கையில் 'சேனல் பார்ட்னர்கள்' கமிஷன் அடிப்படையில் ஈடுபடுவர்' என்றார்
0 comments :
Post a Comment