"பாம்பே பர்ஸ்ட்' என்ற அரசு சாரா தன்னார்வ நிறுவன தலைவர் நரேந்தர் நாயர், அம்மாநாட்டில் பேசியதாவது:ஈராக்குக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் பயங்கரவாதத் தாக்குதல்கள் அதிகமாக நடந்து வருகின்றன. ஈராக்கில் கடந்த சில ஆண்டுகளில் எட்டு முறை பயங்கரவாதத் தாக்குதல் நடந்துள்ளது. 3,500 அப்பாவிகள் பலியாகியுள்ளனர்.கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சமீபமாக இந்தியாவில் அதிகமான தாக்குதல் நடந்துள்ளது. இச்சம்பவங்களில் 3,674 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பை சர்வதேச நகரமாகிவிடக் கூடாது என்பதற்காகத்தான் அதன்மீது தாக்குதல் நடத்தினர்.இவ்வாறு நரேந்தர் கூறினார்.
பயங்கரவாத தாக்குதலில் இரண்டாம் இடத்தில் இந்தியா
பயங்கரவாதத் தாக்குதலில் உலகில் இரண்டாமிடத்தில் இந்தியா இருக்கிறது' என, அரசு சாரா அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.மும்பையில், நேற்று முன்தினம், "பாதுகாப்பு மாநாடு' நடந்தது.
இதில் பல நாடுகளில் இருந்து குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலுள்ள பாதுகாப்பு நிபுணர்கள் பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment