டிவிடி ரைட்டர் இன்னும் மக்களிடையே நம்பிக்கை மிக்க சாதனமாக வலம் வருகிறது. புளு ரே ரைட்டர், பிளாஷ் டிரைவ் என எத்தனை வந்தாலும் டிவிடி ரைட்டர் இன்னும் தேவையாய் தான் உள்ளது.
எனவே தான் சோனி நிறுவனம் கூட இன்னும் புதிது புதிதாய் டிவிடி ரைட்டர்களை வெளியிட்டு வருகிறது. அண்மையில்AD7240S என்ற பெயரில் புதிய டிவிடி ரைட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. முதல் முதலாக 24 எக்ஸ் (24x DVDRW) வேகத்தில் டிவிடியில் எழுதும் ரைட்டர் இதுதான் என சோனி அறிவித்துள்ளது.
இதில் ஆட்டோ ஸ்ட்ரேட்டஜி தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு டிவிடியில் தகவல்களை எழுதுகையில் இந்த டிரைவ் மீடியாவில் உள்ள தகவல்களைச் சற்று முன் கூட்டியே படித்து வைக்கிறது.
இதனால் எழுதும் ஹெட் அதற்கேற்ற வகையில் முழுவதும் பயன்படுத்தப்படும் வகையில் அட்ஜஸ்ட் செய்யப்படுகிறது. எனவே இதுதான் மிக வேகமாகவும் புதிய முறையிலும் செயல்படும் டிவிடி ரைட்டர் என சோனி நிர்வாகி அறிவித்துள்ளார்.
இதில் சீரியல் ATA இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது. இது டிவிடிக்களை 24 எக்ஸ் வேகத்திலும் சிடிக்களை 48 எக்ஸ் வேகத்திலும் எழுதுகிறது. டபுள் லேயர் டிவிடி எனில் 12 எக்ஸ் வேகத்தில் எழுதுகிறது.
இந்தியாவில் இந்த டிவிடி ரைட்டரை ராஷி பெரிபரல்ஸ் விற்பனை செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. இதனை அனைத்து கம்ப்யூட்டர் மற்றும் டிஜிட்டல் சாதன விற்பனைக் கடைகளில் வாங்கலாம். விலை ரூ. 1,500. ஒராண்டு வாரண்டி தரப்படுகிறது.
0 comments :
Post a Comment