கூகுள் தன் மெயில் சேவையில் கூடுதல் பரிமாணம் ஒன்றை அண்மையில் அறிமுகப்படுத்தி உள்ளது.
ஜிமெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் தாய்மொழியில் கடிதங்களைத் தயார் செய்திட வசதி அளித்துள்ளது.
மெயில் பக்கத்தில் கம்போஸ் மெயில் சென்றவுடன் மெனுவின் கீழாக அ என்ற சிறிய ஐகான் தெரிகிறது.
அதில் அழுத்திய பின் நம் தமிழ்ச் சொற்களை ஒலி அமைப்பில் ஆங்கில எழுத் துக்களாலேயே டைப் செய்திடலாம்.
ஒரு சொல்லை டைப் செய்து ஸ்பேஸ் தட்டியவுடன் அது தமிழில் காட்டப்படுகிறது. இந்த வசதி முன்பு தேடுதல் தளத்தில் உள்ள பாரில் தரப்பட்டிருந்தது.
இப்போது மெயில் தளத் தில் கிடைக்கிறது. இந்த அ ஐகான் உங்கள் ஜிமெயில் தளத்தில் தெரியவில்லை என்றால் செட்டிங்ஸ் பக்கம் சென்று லாங்குவேஜ் பிரிவில் இந்த வசதியினை டிக் செய்திடவும்
0 comments :
Post a Comment