சமுதாய சிந்தனையும், நாளைய தலைமுறை மீது அக்கறையும் இல்லாத எழுத்தால் எந்தவித பிரயோஜனமும் கிடையாது என்று "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் கூறினார்.
உயிர்மை பதிப்பகம் சார்பில் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 10 நூல்கள் வெளியீடு மற்றும் உயிரோசை இணைய இதழ் ஓராண்டு நிறைவு விழாவுக்கு தலைமை வகித்து அவர் உரையாற்றினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் இந்திரா பார்த்தசாரதியின் "கடலில் ஒரு துளி', ந. முருகேசபாண்டியனின் "கிராமத்து தெருக்கள்', இந்திரஜித்தின் "இடம்-காலம்-சொல்', அ.ராமசாமியின் "வேறு வேறு உலகங்கள்', தமிழ்மகனின் "செல்லுலாயிட் சித்திரங்கள்', வாஸந்தியின் "தெய்வங்கள் எழுக', மாயாவின் "இன்னும் மிச்சமிருக்கும் இருள்', தமிழவனின் "தமிழுணர்வின் வரைபடம்', ஆர்.அபிலாஷ் தொகுத்த "இன்றிரவு நிலவின் கீழ்', சுதேசமித்திரனின் "சினிமாவின் மூன்று முகங்கள்' ஆகிய நூல்களை தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன் வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் ஒவ்வொரு நூலைப் பற்றியும் கருத்துரையாளர்கள் விமர்சித்துப் பேசினர். உயிர்மை பதிப்பகத்தின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன் வரவேற்றார்.
0 comments :
Post a Comment