- கடையிலிருந்து பிளாஸ்டிக் கவரில் வெண்ணெய் வாங்கி வந்தால் அப்படியே ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்திருந்து பின் எடுத்தால் கையில், கவரில் வெண்ணெய் ஒட்டவே ஒட்டாது.
- ரவையை வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்து ஆறவிட்டு கொட்டி வைத்துக் கொண்டால் வண்டு வராமல் இருக்கும். உப்புமா, கேசரி செய்ய வேண்டுமென்றா லும் உடனே எளிதாகச் செய்துவிடலாம்.
- தக்காளியை சிறிது வேகவிட்டுத் தோல் உரித்து மிக்ஸியில் நைஸôக அரைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் (உப்பு, மிளகாய்ப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு பின் ஆற வைத்து) தக்காளி சாஸôகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். தக்காளி இல்லாத சமயத்தில் சாம்பார், ரசத்திற்கும், கிரேவிகள் செய்யவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- சுக்கு, ஏலக்காயைப் பொடி செய்து வைத்துக்கொண்டால் டீ போடும்போது அவ்வப்போது சேர்த்துக் கொள்ளலாம்.
- இடியாப்ப மாவு, பூரண கொழுக்கட்டை மாவு பிசையும்பொழுது அரை டம்ளர் கொதிக்கும் பாலையும் விட்டு கிளறினால் நல்ல வெள்ளையாக இருக்கும்
0 comments :
Post a Comment