பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) தானியங்கி பணப்பட்டுவாடா மையங்கள் (ஏடிஎம்) அனைத்தும் செயற்கைக்கோள் மூலம் ஒருங்கிணைக்கப்பட உள்ளன. இதற்கான ஆர்டரை ஹியூஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம்கள் உள்ள அனைத்து மையங்களிலும் 2,880 வி-சாட் இணைப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் வங்கிகள் அல்லாத பிற இடங்களில் உள்ள ஏடிஎம்களை ஒருங்கிணைக்க முடியும்.
இந்தப் பணிக்கான ஒப்பந்த மதிப்பு ரூ. 22.5 கோடியாகும். ஏடிஎம்களை ஒருங்கிணைப்பது, செயற்கைக்கோள் தொடர்பை நிர்வகிப்பது ஆகியன இதில் அடங்கும்.
வி-சாட் தொடர்பானது வங்கியின் மத்திய தகவல் தொகுப்புடன் இணைக்கப்பட்டிருக்கும். இந்த தகவல் தொகுப்பு மையம் பேரழிவு இடர்பாடுகளின்போதும் பாதிப்புக்குள்ளாகாத வகையில் இந்த மையம் இருக்கும்.
சுமார் 2,000 ஏடிஎம்கள் எஸ்பிஐ-யின் துணை வங்கிகளுடன் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இதுவரையில் ஹியூஸ் நிறுவனம் வங்கியின் கோர் வங்கி சேவையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சேவை 6,500 கிளைகள் மற்றும் 4,500 ஏடிஎம்களில் நிறுவப்பட்டுள்ளன.
0 comments :
Post a Comment