சிறுநீரக மோசடியை தடுக்க புதிய சட்டம்
சிறு நீரக மோசடியை தடுக்க புதிய சட்டம் கொண்டு வருவது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.குறைந்த பணத்துக்கு ஏழைகளிடம் இருந்து சீறு நீரகம் பெறப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது.
உறுப்புதானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை கண்காணித்து ஒழுங்கு படுத்த கண்காணிப்பு அமைப்பு உள்ளது.
என்றாலும் சிறுநீரகம் மற்றும் பல்வேறு உறுப்புகள் மோசடியாக பெறப்பட்டு வசதி படைத்தோருக்கும், வெளிநாடுகளுக்கும் விற்கப்படுகிறது. எனவே, சிறு நீரக மோசடியை தடுக்க உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வற்புறுத்தப்படடு வந்தது.
இதையடுத்து, சிறுநீரக மோசடியை தடுக்கும் வகையில் உறுப்பு மாற்று சட்ட திருத்தம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதன்படி, 1994-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டத்தில் உரிய திருத்தம் செய்யப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை அளித்துள்ள சட்டத்திருத்த அம்சங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
சிறுநீரக மோசடியை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். சிறுநீரக மோசடி செய்வோருக்கு வழங்கப்படும் தண்டனையும் கடுமை ஆக்கப்படும்.
இது தவிர, ஓரின சேர்க்கை பிரச்சினை குறித்து உச்ச நீதிமன்றம், தெரிவித்துள்ள தீர்ப்பு பற்றி மத்திய மந்திரி சபையில் எந்தவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. இந்த பிரச்சினையை உச்ச நீதிமன்ற முடிவுக்கே விட்டு விடுவது என்றும் மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதுச்சேரி உள்பட நாட்டின் 9 இடங்களில் ரூ.2350 கோடி செலவில் மத்திய தேசிய தொழில் நுட்பமையங்கள் அமைப்பது, பருப்பு வகைகள், சர்க்கரை ஆகியவற்றுக்கான கட்டுப்பாடுகளை அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை நீடிப்பது ஆகியவற்றுக்கும் மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment