திரைப்படத்துறையில் கமல்ஹாசனின் 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி செப்டம்பர் மாதம் முழுவதும் விஜய் டி.வி.யில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன.
அந்த வகையில், கடந்த வாரம் கோவையில் நடைபெற்ற "கமலும் காதலும்' நிகழ்ச்சி விஜய் டி.வி.யில் இடம்பெறுகிறது. இதில் கமல்ஹாசனின் திரைப்படங்களிலிருந்து காதல் பாடல்களை எஸ்.பி.பாலசுப்ரமணியமும் சித்ராவும் பாடுகிறார்கள்.
குறிப்பாக, "அவள் ஒரு தொடர்கதை' படத்தில் வரும் "கடவுள் அமைத்து வைத்த மேடை' பாடலை பல குரல்களில் பாடி நேயர்களைக் கவருகிறார் எஸ்.பி.பி.
இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீராம் பார்த்தசாரதி, கார்த்திக், ஹரிசரண், சாய் மதுமிதா, ஹரிணி, சைந்தவி உள்ளிட்ட பல பாடகர்கள் கலந்துகொண்டு கமல்ஹாசனின் "சூப்பர் ஹிட்' காதல் பாடல்களைப் பாடுகிறார்கள்.
கமல்ஹாசனின் பிற மொழிப் பாடல்களும் இதில் இடம்பெறுவது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு பாடலுக்கும் இடையை கமல்ஹாசனைப் பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்கள் சொல்லப்படுகின்றன.
இந்த நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை (செப்.20) காலை 11 மணிக்கு விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகிறது.
0 comments :
Post a Comment