கமல்ஹாசன் நடித்த "உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்தை வெளியிடுவது தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, "உன்னைப் போல் ஒருவன்' திரைப்படத்தை செப்டம்பர் 18-ம் தேதி திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
"பிரமிட் சாய்மீரா' நிறுவனத்தின் இயக்குநர் என். நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள மனு விவரம்:
"பிரமிட் சாய்மீரா' நிறுவனம் மற்றும் "ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்' ஆகியவற்றுக்கு இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்த ஒப்பந்தத்தின் படி, ரூ. 100 கோடியில் "மர்மயோகி' படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் இணைந்து தயாரிக்க முடிவு செய்யப்பட்டது.
"மர்மயோகி' படத் தயாரிப்புக்காக "பிரமிட் சாய்மீரா' நிறுவனம் ரூ. 7 கோடியை "ராஜ்கமல் பிலிம்ஸ்' நிறுவனத்துக்கு வழங்கியது.
ஆனால், இந்தப் படத்தை தயாரிப்பதில் கமல் உரிய அக்கறை செலுத்தவில்லை. நாங்கள் வழங்கிய பணம், "உன்னைப் போல் ஒருவன்' தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
"உன்னைப் போல் ஒருவன்' திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பாக எங்களது பணம் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது.
இதுவரை ரூ. 7 கோடி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் படத்தை வெளியிட்டால் எங்களுக்கு இழப்பு ஏற்படும் என்பதால், படத்தை வெளியிடுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.
நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் இந்த மனு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
""வழக்கு புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதுவரை பட ரீலிஸ் தொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்'' என்று நீதிபதி உத்தரவிட்டார்
0 comments :
Post a Comment