எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேலாக டேட்டாக்களின் தன்மையைக் காட்ட தலைப்பு கொடுக்க எண்ணுவோம். பலவகையான செல்களுக் கும் பொதுவாக ஒரு நீள செல் இருந்தால் இதற்கு வசதியாக இருக்கும்.
சிலர் இந்த வசதி பெற, செல்களின் முன் ஸ்பேஸ் பார் அழுத்தி இடைவெளியை உருவாக்குவார்கள். தேவைப்படும் நீளம் வரும்வரை இந்த ஸ்பேஸ் உருவாக்குவார்கள். இதற்கு எக்ஸெல் செல்களை இணைக்கும் வழியைத் தருகிறது.
இதனை மேற்கொண்டால், ஒன்றுக்கு மேற்பட்ட செல்களை இணைத்து அவற்றிற்கு தலைப்பு கொடுத்து, ஓரமாகவோ, நடுவிலோ அதனை அமைப்பது எளிதாகிறது.
இந்த வழி “merging cells” எனத் தரப்பட்டுள்ளது. இதனை எப்படி மேற்கொள்வது எனப் பார்க்கலாம்.
முதலில் நீங்கள் ஒன்றாக ஆக்கிட விரும்பும் அனைத்து செல்களையும் தேர்ந்தெடுக்கவும்.
இரண்டாவதாக பார்மட்டிங் டூல்பார் (Formatting toolbar) செல்லவும். இங்கே Merge and Center என்று இருக்கும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அனைத்து செல்களும் ஒன்றாகத் தெரியும். இதில் நீங்கள் என்ன டைட்டில் வேண்டுமென்றாலும் டைப் செய்து கொள்ளலாம்.
மிகச் சரியாக எந்தவிதமான எக்ஸ்ட்ரா ஸ்பேஸ் எதுவும் இல்லாமல் டைட்டில் உங்கள் டேட்டாக்களுக்கு மேலாக நடுவில் ஜம்மென்று அமர்ந்து விடும். நீங்கள் இன்னொன்றும் எதிர்பார்ப்பது தெரிகிறது! இப்படி இணைந்ததை வேண்டாம் என்று கருதி மீண்டும் செல்களாக வேண்டுமென்றால் என்ன செய்வது? சிலர் இந்தக் கேள்விக்குப் பதிலாக Merge and Center பட்டனை மீண்டும் கிளிக் செய்து பார்த்திருப்பார்கள்.
ஆனால் அது எதிர்பார்த்த பணியைச் செய்திருக்காது. ஏனென்றால் இந்தப் பிரச்னைக்கு அது வழியல்ல. அப்படியானால் செல்களை எப்படி பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வருவது? இப்போது மீண்டும் எந்த இணைந்த செல்களைப் பிரித்து பழைய நிலைக்குக் கொண்டு வர எண்ணுகிறீர்களோ அவற்றைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் Format Cells விண்டோவினைத் திறக்கவும். இதற்கு Format மெனு சென்று Cells என்ற பிரிவில் கிளிக் செய்திடுக. அல்லது Ctrl + 1 என்ற இரண்டு கீகளை அழுத்திடுக. இப்போது கிடைக்கும் விண்டோவில் Alignment டேப் திறக்கவும்.
இதில் Merge Cells என்ற பிரிவிற்கு முன்னால் ஒரு டிக் அடையாளத்தை ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்து மூடவும். இப்போது ஒன்றாக இணைந்த செல்களெல்லாம் தனித்தனியே பிரிக்கப்பட்டு கிடைக்கும்.
1 comments :
நல்ல தகவல்.....
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
Post a Comment