பிரவுசர்களில் பயர்பாக்ஸ் பயன்பாடும், மெயில் சர்வர் சேவைகளில் ஜிமெயிலும் அதிக அளவில் வாடிக்கை யாளர்களைக் கொண்டிருக்கும் இரு சாதனங்களாகும். இவற்றை இணைத்துச் செயல்படுத்தும் ஆட் ஆன் தொகுப்புகள் தற்போது இணையத்தில் கிடைக்கின்றன.
ஆம், பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்துபவர்கள் ஓர் ஆட் ஆன் புரோகிராமி னை இணைப்பதன் மூலம், தங்களுக்கு வந்துள்ள ஜிமெயில் அஞ்சல்களை செக் செய்து தருமாறு பயர்பாக்ஸ் பிரவுசரை செட் செய்திடலாம்.
இதற்கு உதவும் ஆட் ஆன் புரோகிராம் பெயர் ஜிமெயில் செக்கர் (Gmail Checker). இதனைhttps://addons.mozilla.org/enUS/firefox/addon/gmailchecker என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இந்த தளம் சென்று, Add to Firefox என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். பின்னர், பயர்பாக்ஸ் பிரவுசரை மீண்டும் இயக்கவும்.
இது இன்ஸ்டால் ஆனவுடன், Customize Toolbar விண்டோவில் காட்டப்படும். இதனை எங்கு வேண்டுமானாலும் இழுத்துச் சென்று வைத்துக் கொள்ளலாம். Customize Toolbar பெறுவதற்கு View கிளிக் செய்து, டூல்பார் மெனுவில் இருந்து Customize என்பதனைக் கிளிக் செய்திடவும்.
இனி Manage Accounts என்பதைக் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் Gmail Checker டயலாக் பாக்ஸில், கேட்கப்படும் அக்கவுண்ட் தகவல்களைத் தரவும். ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட் தகவல்களையும் தரலாம். இனி, இந்த ஐகானைக் கிளிக் செய்து ஒரு அக்கவுண்ட் அல்லது அமைத்த அனைத்து அக்கவுண்ட்களையும் பெறலாம்.
இங்கு கிடைக்கும் அஞ்சல்களில், குறிப்பிட்ட ஒன்றைத் திறந்து பார்க்கலாம். Settings கிளிக் செய்து நாம் விரும்பும் வகையில் நம் ஆப்ஷன்களை அமைக்கலாம்.
எடுத்துக்காட்டாக, Show notification popup என்பதில் டிக் அடையாளம் அமைத்தால், புதிய மெயில்கள் பெறப்படுகையில், டாஸ்க் பார் மேலாக, பாப் அப் விண்டோ காட்டப்பட்டு, அதில் தகவல்கள் கிடைக்கும்.
இதனுடன், புதிய மெயில்களைச் செக் செய்திட, கால அவகாசம், பிரவுசர் திறக்கும்போது தானாகவே ஜிமெயில் தளத்தில் லாக் இன் செய்வது போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இவை அனைத்தும் செட்டிங்ஸ் பகுதியில் மேற்கொள்ளலாம்.
1 comments :
மிகவும் உபயோக மான தகவல் நண்பரே !!! பகிர்வுக்கு நன்றி
Post a Comment