கூகுள் தளத்தில் எப்படி பனி விழும்? நீங்கள் கேட்டுக் கொண்டால், அந்தக் காட்சியையும் கூகுள் காட்டுகிறது. கூகுள் தளத்தினைத் திறந்து, அதன் தேடுதல் தளம் செல்லவும். இதன் சர்ச் பாக்ஸில் “let it snow” என டைப் செய்திடவும்.
உடனே, உங்கள் கம்ப்யூட்டர் திரையில் பனி விழத் தொடங்கும். தொடர்ந்து பனி விழுவதனால், கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மானிட்டர் திரை வெண்மைப் பனியால் மூடப்படும். எழுத்துக்கள் என்ன உள்ளன என்று தெரியாது.
அப்படியானால் என்ன செய்வது என்று கவலைப்படுகிறீர்களா? கூகுள் வலது மேற்புறத்தில் “defrost” என்ற ஒரு லிங்க் தந்துள்ளது. இதில் கிளிக் செய்தால், அனைத்து பனியும் பகலவனைக் கண்டது போல பறந்துவிடும்.
அல்லது மவுஸ் கர்சர் மூலம் ஓர் இதயத்தின் படத்தை, உங்கள் இனிஷியல் எழுத்துக்களை அமைக்கவும். பனி விலகும்.
இது போல கூகுள் இன்னும் சில வித்தைகளைத் தந்துள்ளது. “tilt” மற்றும் “askew” என்ற சொற்களை, இந்த தேடல் கட்டத்தில் டைப் செய்திடவும். உடனே நீங்கள் உங்கள் தலையைச் சாய்த்துப் பார்க்கும் விதத்தில், மானிட்டரின் திரை சாய்வான கோணத்தில் இருக்கும்.
இதே போல இன்னொரு வேடிக்கையும் உள்ளது. பொதுவாக நாம் தவறாக ஒரு சொல்லை டைப் செய்தால், நீங்கள் இந்த சொல்லுக்குத்தானே தேடுகிறீர்கள் என்று சரியான சொல்லைக் காட்டி, அதற்கான தேடல் விளைவுகளைக் காட்டும்.
ஆனால் “recursion” என்ற சொல்லை தேடல் கட்டத்தில் டைப் செய்தால், மீண்டும் அதே சொல்லை அதே எழுத்துக்களில் காட்டி இந்த சொல்லா? என்று கூகுள் கேட்கும். ஏன் இந்த தவறான தடுமாற்றம்? கூகுளுக்குத் தான் வெளிச்சம்.
முன்பு இதே போல ஒரு விளையாட்டினை gravity என்ற சொல்லை டைப் செய்தால், கூகுள் தந்து வந்தது. இந்த சொல்லை டைப் செய்து என்டர் தட்டியவுடன், அந்த பக்கச் செய்திகள் ஒருகோட்டை இடிந்து விழுவதைப் போல சிறு சிறு பகுதிகளாகத் தரையில் விழுவதைப் பார்க்கலாம்.
இப்போது இந்த விளையாட்டினை நிறுத்திவிட்டது. அது எப்படி இருந்தது என்று காண வேண்டுமானால், http://mrdoob.com/projects /chromeexperiments/google_gravity/ என்ற முகவரியில் உள்ள தளம் சென்று காணவும்.
0 comments :
Post a Comment