சென்ற டிசம்பரில் மொஸில்லா தன் பயர்பாக்ஸ் பிரவுசரின் பதிப்பு 9னை வெளியிட்டது. ஜாவா ஸ்கிரிப்ட் இயக்குவதில், இந்த பதிப்பு, முந்தை யவற்றைக் காட்டிலும் 38% கூடுதல் வேகத்தில் இயங்கும் என்ற அறிவிப்புடன் இது வெளியாகியுள்ளது.
நவம்பரில் பயர்பாக்ஸ் பதிப்பு 8னை வெளியிட்டு ஆறு வாரங்கள் கழித்து பதிப்பு 9 வெளியாகியுள்ளது. இதில் “type inference” என்ற தொழில் நுட்பம் பயன்படுத்தப் பட்டுள்ளதாகவும், இதன் மூலம், ஆன்லைன் கேம்ஸ், அதிக பக்கங்கள் கொண்ட இணைய தளங்கள், அதி நவீன வெப் அப்ளிகேஷன்கள் ஆகியவை கூடுதல் வேகத்தில் இயக்கப் படும் என மொஸில்லா கூறியுள்ளது.
இந்த தொழில் நுட்பத்தினை உருவாக்குவதில், கடந்த ஓராண்டாக மொஸில்லா செயல்பட்டு வந்தது. இதன் மற்ற சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
இதன் இன்டர்பேஸ் தளத்தில் முக்கிய மாற்றங்கள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை. மேம்படுத்தப்பட்ட இந்த பதிப்பில், வைரஸ் மற்றும் பிற மால்வேர்கள் தாக்கக் கூடிய இடங்கள் சீர் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் நான்கு மிக மிகப் பலவீனமானவையாகும். மெமரியைக் கையாள்வதில் இருந்த 23 பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளன.
குரோம் பிரவுசர் தன் அப்டேட் பைல்களை பயன்படுத்துபவர் அறியாமல் கம்ப்யூட்ட ருக்குள் அனுப்பி பிரவுசரை மேம்படுத்தும். ஆனால், பயர்பாக்ஸ் இந்தப் பதிப்பிலும் அந்த வழக்கத்தைப் பின்பற்றவில்லை. அப்படி ஒரு வழக்கத்தைத் தரப்போவதாக மொஸில்லா முன்பு உறுதி அளித்தது. ஆனால் இன்னும் அதனை நடைமுறைப் படுத்தவிலை. வரும் ஏப்ரலில் வெளியிடப் பட இருக்கும் பதிப்பில் இதனை எதிர்பார்க்கலாம்.
டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களுக்கான பிரவுசரை வெளியிட்டுள்ள அதே நேரத்தில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் பிரவுசருக்குமான பதிப்பும் வெளியிடப்பட் டுள்ளது. ஸ்மார்ட்போன்களுக்கான பதிப்பும், டேப்ளட் பிசிக்களுக்கான பதிப்பும் வெளியாகியுள்ளது. கூகுளின் ஆண்ட்ராய்ட் மார்க்கட்டில் இருந்து இவற்றை டவுண்லோட் செய்திடலாம்.
ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் பிரவுசர் பதிப்பில் பல புதிய மாற்றங்களை இயக்கத்திலும் தோற்றத்திலும் கொண்டு வந்துள்ளது மொஸில்லா.
விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் சிஸ்டங்களில் இயங்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 9னை மொஸில்லாவின் இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பயர்பாக்ஸ் பதிப்பு 4 மற்றும் அதன் பின்னர் வந்த பதிப்புகளைப் பயன்படுத்துபவர்கள், இந்த தளத்திலிருந்து அப்டேட் செய்வதற்கான பைல்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். வரும் ஜனவரி 31ல் அடுத்த பதிப்பு கிடைக்கும்.
இந்த பதிப்பு வெளியான மறு நாளே, தன் பிரவுசரில் இருந்த ஒரு பிழையைக் கண்டறிந்தது மொஸில்லா. அதனைச் சரி செய்திடும் அப்டேட் பைலையும் வெளியிட்டது. மேக், லினக்ஸ் மற்றும் விண்டோஸ் இயக்கங்களில், இந்த பிழையினால் பிரவுசர் கிராஷ் ஆன தகவல் வெளியானதைத் தொடர்ந்து இந்த அப்டேட் வெளியானது.
இந்த அப்டேட் வெளியான போது, பலர் இதனை ஒரு ஏமாற்று பேர்வழியின் ஹேக் முயற்சி என்றே எண்ணினர். ஏனென்றால், இதுவரை சாப்ட்வேர் உலகில் இது போல மறு நாளே எந்த நிறுவனமும் அப்டேட் வெளியிட்டதில்லை. மொஸில்லாவின் தளத்தில் இந்த செய்தி வெளியான பிறகே அனைவரும் நம்பினர். பயர்பாக்ஸ் 9 பயன்படுத்துபவர்கள், இதுவரை இந்த அப்டேட் செய்திடாமல் இருந்தால், பிரவுசரை இயக்கி, ஹெல்ப் மெனு சென்று இதனைப் பெற்று அப்டேட் செய்து கொள்ளலாம்.
புதிய பதிப்பு வெளியான கையோடு, கூகுள் நிறுவனத்துடன் தான் மேற்கொண்டிருந்த ஒப்பந்தத்தினை மொஸில்லா மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதன்படி, இந்த பிரவுசருக்கான மாறா தேடல் இஞ்சினாக கூகுள் தேடல் சாதனம் இருக்கும். 2008ல் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் சென்ற நவம்பரில் முடிவிற்கு வந்தது. தற்போது இது தொடர்கிறது.
கூகுள் சப்போர்ட் செய்து வருவதால், ஒரு காலத்தில் பயர்பாக்ஸ் பிரவுசரை "கூகுள் பாக்ஸ்' என அழைத்தனர். இப்போது கூகுள் நிறுவனமே தன் குரோம் பிரவுசரை முன்னிலைப்படுத்தி வருகிறது. ஆனால் கூகுள் எந்த பிரவுசரையும் போட்டி எனக் கருதாமல், மக்களுக்கு அதி வேகமான இயக்கத்தில் பிரவுசிங் அனுபவத்தினைத் தர வேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகிறது.
0 comments :
Post a Comment