இந்தியாவில் இந்த ஆண்டில், டேப்ளட் பிசி விற்பனை பெரிய அளவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக மிகக் குறைந்த விலையில் அறிவிக்கப்பட்ட ஆகாஷ் டேப்ளட் பிசி வரும் ஜனவரியில் வர இருப்பதால், இந்த சந்தை வேகமாக சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
தற்போது நாளொன்றுக்கு 8,000 டேப்ளட் பிசிக்கள் விற்பனையாகின்றன. தற்போது ரூ.10,000க்கும் கீழாக ரூ.3,500 முதல் ரூ.48,000 வரை உள்ள டேப்ளட் பிசிக்களே அதிகம் விற்பனையாகின்றன.
கம்ப்யூட்டர் மார்க்கட் ரிசர்ச் என்னும் ஆய்வு அமைப்பின் கணிப்பின்படி, 2012 ஆம் ஆண்டில், 85,000 டேப்ளட் பிசிக்கள் வரை விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பினையும் மீறி இன்னும் அதிகமாகவும் விற்பனை செய்யப்படலாம். ஏறத்தாழ, 15 நிறுவனங்கள் தற்போது இந்தச் சந்தையில் போட்டியிட்டு வருகின்றன.
டேப்ளட் பிசி விற்பனை ஒவ்வொரு ஆண்டும் இரண்டு மடங்கு ஆகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், 2017ல் 2 கோடியே, 33 லட்சத்து 80 ஆயிரம் என்ற எண்ணிக்கையை இந்த விற்பனை எட்டும்.
நடப்பு ஆண்டில், இந்த சந்தையில் சீன சந்தையிலிருந்து மைக்ரோமேக்ஸ், ஜி பைவ் மற்றும் கார்பன் போன்ற நிறுவனங்களும் விற்பனையில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் பெயர் பெற்ற Apple, Samsung, RIM, மற்றும் Motorola போன்ற நிறுவனங்கள், உயர் நிலையில் இயங்கும் நிறுவனங்களாகும்.
இவை விற்பனை செய்திடும் டேப்ளட் பிசிக்களின் விலை ரூ. 29,000 முதல் ரூ. 48,000 வரை உள்ளன. இந்த விலை அமைப்பை அடுத்து, இந்திய நிறுவனங்களான Reliance Communications, Beetel, Wespro ஆகியவை அடுத்த மத்திய மற்றும் அதற்கும் அடுத்த நிலையில் இயங்குகின்றன.
2010ல் 60 ஆயிரம் டேப்ளட் பிசிக்களும், 2011ல் 3 லட்சம் பிசிக்களும் விற்பனை செய்யப்பட்டன. டேட்டா விண்ட் நிறுவனத்தின் ஆகாஷ் டேப்ளட் பிசி ரூ.2,500க்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிறுவனம், முதலில் தன்னை கல்வி நிலையங் களில் நிலைப்படுத்த முயற்சிக்கிறது. பெங்களூருவில் இயங்கும் லஷ்மி அக்செஸ் கம்யூனிகேஷன்ஸ் சிஸ்டம்ஸ் நிறுவனம் தன்னுடைய மேக்னம் (Magnum) டேப்ளட் பிசியினை ரூ. 6,999 என விலையிட்டுள்ளது.
0 comments :
Post a Comment