அனைத்து பிரபலமான பிரவுசர்களும், இப்போது, பிரைவேட் பிரவுசிங் எனப்படும் தனிப்பட்ட உலா என்ற வழிவகையினைத் தந்துள்ளன.
பிரைவேட் மோட் மற்றும் இன் காக்னிடோ என இவை பிரவுசருக்கேற்றபடி அழைக்கப்படுகின்றன. இந்த வகையில் இணைய உலா வருகையில், நாம் காணும் தளங்களின் பெயர்கள், பிரவுசரில் பதிவு செய்யப்பட மாட்டாது.
இதன் மூலம் நாம் பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் நாம் இணையத்தில் தளங்களைப் பார்க்கையில், எந்த தளங்களைப் பார்த்தோம் என மற்றவர்கள் அறிய முடியாது.
எனவே வழக்கம்போல பிரவுசரை இயக்கிச் சில தளங்களைப் பார்த்த பின், பிரைவேட் பிரவுசிங் வேண்டும் என விரும்பினால், மீண்டும் முதலில் இருந்து, பிரவுசர் இயங்கத் தொடங்கும். இந்த வகையில் குரோம் பிரவுசர் இன்னும் ஒரு படி மேலே போய், சில குறிப்பிட்ட தளங்களை, எப்போதும் பிரைவேட் பிரவுசிங் என்ற முறையில் காணும்படி செட் செய்திடும் வழியினைத் தந்துள்ளது.
கூகுளின் குரோம் பிரவுசரைப் பொறுத்த வகையில் இந்த வகை இணைய உலா Incognito Mode என அழைக்கப்படுகிறது என்பது நீங்கள் அறிந்ததே. குறிப்பிட்ட தளங்களைக் காண்பதை மட்டும் இந்த முறைக்கு மாற்ற குரோம் எக்ஸ்டன்ஷன் தொகுப்பு ஆட்டோ நிட்டோ(Autonito) உதவுகிறது.
இதன் மூலம் நாம் எப்போதும் இன் காக்னிடோ எனப்படும் பிறர் அறியா இணைய உலா வகையில் காண விரும்பும், இணைய தளங்களை இதில் பட்டியலிட்டு வைக்கலாம். அவ்வாறு அமைத்த பின்னர், அந்த தளத்திற்குச் செல்கையில், குரோம் பிரவுசர், இன் காக்னிடோ முறைக்கு மாறிக் கொள்கிறது. இதற்கென தனி விண்டோவினைத் திறந்து, குறிப்பிட்ட தளத்தினை இயக்குகிறது.
இந்த தளத்தின் பெயரை, அட்ரஸ் பாரில் டைப் செய்து இயக்கினாலும், அல்லது வேறு ஒரு தளம், அல்லது மெயிலில் உள்ள லிங்க் மூலம் இயக்கினாலும், இந்த வகை வழியில் தளம் நமக்குத் தரப்படுகிறது.
ஆனால், இதில் ஒரு பிரச்னை உள்ளது. இந்த வகையில் நாம் பட்டியலிடப்பட்ட தளங்கள் அனைத்தும் பிரவுசரிலேயே பட்டியலிடப் பட்டுள்ளன. இதனால், நாம் அவற்றைப் பார்த்தோம் என்பது இல்லை என்றாலும், அவை எவை என்று பிறர் அறியும் வகையில் உள்ளது என்பது தேவையற்ற ஒன்று தானே.
ஆட்டோ நிட்டோ என்ற இந்த ஆட் ஆன் தொகுப்பினை கூகுள் குரோம் எக்ஸ்டன்ஷன் காலரியில் இருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். தளத்தின் முகவரி: https://chrome.google. com/extensions/detail/aaknjhenmanmibfigajllodbhkgdigbd?hl=en
2 comments :
உபயோகமான பதிவு
உபயோகமான பதிவு
Post a Comment