அவிரா, அவாஸ்ட், நார்டன், ஏவிஜி என எத்தனை இலவச ஆண்ட்டி வைரஸ் பதிப்புகளை மக்கள் பயன்படுத்தி வந்தாலும், இவற்றையும் மீறி ஏதாவது நடந்துவிடுமோ என்று தான் நாம் அஞ்ச வேண்டியதுள்ளது.
ஏனென்றால், நாளுக்கு நாள் புதிய கோணங்களில், வடிவங்களில், வைரஸ்கள் உருவாக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் புதிய வகை ஆண்ட்டி வைரஸ் தொகுப்புமுறை ஒன்றினை அண்மையில் காண நேர்ந்தது. இது அண்மையில் பரவிவரும் கிளவுட் கம்ப்யூட்டிங் முறையைச் சேர்ந்ததாகும். ஆனால் முற்றிலும் இலவசமே. இதனுடைய பெயர் Panda Cloud AntiVirus.
இதன் முதல் சிறப்பு என்னவென்றால், வைரஸ் டெபனிஷன்ஸ் எனப்படும் குறியீடுகள் நம் கம்ப்யூட்டரில் பதியப்படுவதில்லை. அவை பண்டா சர்வரிலேயே இருக்கும். இவை அனைத்தும், இதன் சர்வரிலேயே இருப்பதால், அப்டேட் செய்யப்படுவதும் அங்கேயே தான்.
எனவே தாமதமாக அப்டேட் என்ற பேச்சிற்கே இடமில்லை. லேட்டஸ்ட் வைரஸ் அப்டேட் நாம் செய்யவில்லையே என்ற பயமும், தூக்கமில்லா இரவுகளும் நமக்கு இல்லை.
இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை, பன்னாடுகளில் ஒரு கோடி பேருக்கு மேல் பயன்படுத்தி வருகின்றனர். எனவே எந்த ஒரு கம்ப்யூட்டரில் ஒரு வைரஸ் கண்டறியப்பட்டாலும், உடனே அது பண்டா சர்வருக்கு அனுப்பப்பட்டு, உடனடியாகத் தீர்வு காணப்படுகிறது.
வைரஸ் காணப்பட்ட சில நிமிடங்களில் அதனைத் தீர்த்துக் கட்டும் தொகுப்பு தயாராகிவிடுகிறது. எனவே தற்போதைக்குப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்ட்டி வைரஸ் மற்றும் கட்டணம் செலுத்திப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகவும் சிறந்ததாகவே தெரிகிறது.
இலவசம் என்பதால், இறக்கிப் பயன்படுத்திப் பார்க்கலாமே! http://www.cloudantivirus.com/en/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் இதனைக் காணலாம். இதற்கான அழகான விளக்க வீடியோவும் இதில் தரப்பட்டுள்ளது இதன் சிறப்பு.
இல்லை எனக்கு வழக்கமான ஆண்ட்டி வைரஸ் தான் வேண்டும் என நீங்கள் விரும்பினால், பத்து கோடிப் பேருக்கு மேல் பயன்படுத்தும் அவாஸ்ட் (Avast) மற்றும் அதே போலப் பலரால் பயன்படுத்தப்படும் அவிரா (Avast) ஆகிய தொகுப்புகளில் ஒன்றைப் பயன்படுத்தலாம்.
அவாஸ்ட் தேவைப்படுபவர்கள் செல்ல வேண்டிய இணையதள முகவரி http://www.avast.com/ freeantivirusdownload.
அவிரா வேண்டும் என்றால் http://www.softpedia.com/progDownload/AntiVirPersonalEditionDownload6527.html என்ற முகவரிக்குச் செல்லுங்கள்.
0 comments :
Post a Comment