பல வேளைகளில், நாம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ பைல்களை, யு–ட்யூப் வீடியோ தளத்தில் கிளிக் செய்திடுவோம். அப்போது நம் ஸ்பீக்கரில் அவை அனைத்தின் ஒலி கிடைக்கும்.
சில வேளைகளில், ஒவ்வொன்றும் இறங்கும் போது, ஸ்ட்ரீமிங் வேகம் குறைவாக இருக்கும் என்பதால், விட்டு விட்டு ஒலி கேட்கும். இதனை நிறுத்த வேண்டும் எனில், ஒவ்வொரு வீடியோ திறந்திருக்கும் பக்கம் உள்ள டேப்பினைக் கிளிக் செய்து, ஆடியோ பட்டனை மொத்தமாகக் குறைக்க வேண்டும்.
அப்போதுதான், வீடியோ படம் மெமரியில் இறங்கும். பின்னர் எந்தவிதத் தொந்தரவும் இன்றி கேட்டுக் கொள்ளலாம்.
இந்த ஆட்டோ பிளே வசதியை யு–ட்யூப் தளத்தில் நிறுத்த பல ஆட் ஆன் தொகுப்புகள் இணையத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன. சில இயங்காமல் இருப்பது மட்டுமின்றி, முழு வீடியோ பைலும் இறக்கம் கண்டபின்னரே, இயங்கத் தொடங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை இங்கு காணலாம்.
கூகுள் குரோம் பிரவுசருக்கென Stop Autoplay என்ற ஆட் ஆன் தொகுப்பு தரப்பட்டுள்ளது. வீடியோ உள்ள தளத்தினைக் கிளிக் செய்தவுடன், அதற்கான விண்டோ கிடைத்தவுடன், அது இயங்குவதனை இந்த ஆட்–ஆன் தொகுப்பு தடுக்கிறது.
அதே நேரத்தில் வீடியோ பைல் இறங்குவதைத் தடுப்பதில்லை. இதனால் பின்னணியில் வீடியோ பைல் 100% முழுமையாகக் கம்ப்யூட்டரை வந்தடைய முடிகிறது. அது மட்டுமின்றி, இந்த புரோகிராம் எச்.டி.எம்.எல். மற்றும் பிளாஷ் என இரண்டையும் சப்போர்ட் செய்கிறது.
இந்த ஆட் ஆன் புரோகிராமினைப் பெறhttps://chrome.google.com/ extensions/detail/lgdfnbpkmkkdhgidgcpdkgpdlfjcgnnh?hl=en என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ஆட்டோ பிளே தடை செய்யப்படும் ஆட் ஆன் தொகுப்பு, யு–ட்யூப் மட்டுமின்றி, எந்த வீடியோ பைல் தளத்தில் பதிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையாக இறங்காமல் இயக்கவிடுவதில்லை. முதலில் தானாக இயங்குவதனைத் தடுக்கிறது.
பின்னர் தளத்தில் வீடியோ பைல் பதிக்கப்பட்டிருந்தால், அந்த இடத்தில் சிகப்பாக ஒரு கட்டத்தினைக் காட்டுகிறது. இதனைப் பெற இணையத்தில்https://addons.mozilla.org/enUS/firefox/addon/1765/ என்ற முகவரிக்குச் செல்லவும்.
https://addons.mozilla.org/enUS/firefox/addon/6648/ என்ற முகவரியில் இதே போன்ற இன்னொரு ஆட் ஆன் தொகுப்பும் பயர்பாக்ஸ் பிரவுசருக்கெனக் கிடைக்கிறது.
0 comments :
Post a Comment