புதிய அலை ஏற்படுத்தும் சாம்சங் வேவ்
கவர்ச்சியான தோற்றம், கட்டமைப்பு, டிஸ்பிளே, வழிநடத்தும் மெனுக்கள், நல்ல படங்களை எடுக்கும் கேமரா, எச்.டி. வீடியோ பிளே பேக், மிகச் சிறப்பான ஒலி வெளிப்பாடு, ஒரே நேரத்தில் பல செயல்களை மிக எளிதாக மேற்கொள்ள வசதி, கொடுக்கும் விலைக்கு ஈடு கொடுக்கும் பலப்பல வசதிகள் என மொபைல் போன் சந்தையில், ஒரு புதிய அலையினை ஏற்படுத்தியுள்ளது சாம்சங் நிறுவனத்தின் வேவ் மொபைல் போன்.
திரையில் AMOLED டிஸ்பிளே, ஒரு கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர், 5 மெகா பிக்ஸெல் கேமரா, 720p வீடியோ ரெகார்டிங், படா (Bada) ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆகியன இதற்கு திறன் கூட்டுகின்றன.
1500 mAh திறன் கொண்ட பேட்டரி நீண்ட கால உழைப்பைத் தருகிறது. பிரவுசிங், வை–பி, பிளேபேக் என அனைத்து வேலைகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டாலும், இதன் திறன் விரைவில் குறைவதில்ல. இதன் ஸ்லாட் அருகேயே சிம் கார்ட் மற்றும் மைக்ரோ கார்ட் ஸ்லாட் இணைந்து அமைக்கப்பட்டுள்ளது.
இதில் உள்ள 800 x 480 பிக்ஸெல் திறனுடன் கூடியAMOLED 3.3 அங்குல திரையினை, சாம்சங் சூப்பர்AMOLED திரை என அழைக்கிறது. வழக்கமான இத்தகைய திரையினைக் காட்டிலும், இது 20% பிரைட்னஸ் அதிகம் என்று கூறுகிறது. போனின் செயல்பாட்டிற்கு வேகம் அளித்திட 1 கிகா ஹெர்ட்ஸ் ப்ராசசர் இயங்குகிறது. இதன் நினைவகம் 2 ஜிபி கொள்ளளவு கொண்டுள்ளது.
இது நான்கு பேண்ட் அலைவரிசையில் இயங்குகிறது. நெட்வொர்க் இணைப்பு வேகம் பாரட்டத்தக்க வகையில் உள்ளது. இதில் சாம்சங் டால்பின் பிரவுசர் தரப்பட்டுள்ளது. இதன் யூசர் இன்டர்பேஸ் மற்றவற்றுடன் ஒப்பிடுகையில் சற்று குழப்பத்தினையே தருவதாக உள்ளது.
ஆட்டோ போகஸ் திறனுடன் கூடிய 5 மெகா பிக்ஸெல் கேமரா சிறப்பாக வேலை செய்கிறது. 1280 x 720 ரெசல்யூசன் திறனில், விநாடிக்கு 15 பிரேம் வேகத்தில் வீடியோ ரெகார்டிங் மேற்கொள்ளலாம். மியூசிக் பிளேயர்MP3, AAC மற்றும் WMA என்ற மூன்று பார்மட்களையும் சப்போர்ட் செய்கிறது.
இதன் ஆல்பம் பல வசதிகளைக் கொண்டதாக உள்ளது. எப்.எம். ரேடியோ அலைவரிசைகளை விரைவாகப் பெற்றுத் தருகிறது. இந்த போனின் குறியீட்டு விலை ரூ.18,000.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment