வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.
அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது.
இதில் இன்னொரு சிக்கலும் உள்ளது. இப்போது பெரும்பாலானவர்களால் இன்னும் பயன்படுத்தப் பட்டுக் கொண்டிருக்கும் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இது செயல்படாது. இதனால், இதனைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கும் அளவிற்கு உயராது.
இதில் தரப்படும் சில வசதிகள், தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருக்குப் போட்டியாகச் சந்தையில் உள்ள மற்ற பிரவுசர்களில் உள்ளவையாக இருக்கும் என்று கருதப்படுகிறது. சீன நாட்டின் தளம் ஒன்றில் இந்தக் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
எடுத்துக்காட்டாக "Your most popular sites" என்ற வகையில் நாம் அடிக்கடி செல்லும் இணைய தளங்களுக்கான சிறிய படங்கள் காட்டப்படும் என இந்த தளம் அறிவித்துள்ளது. இது தற்போது குரோம் பிரவுசரில் உள்ள ஓர் அம்சமாகும்.
அதே போல ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை டவுண்லோட் செய்திடத் தரப்பட்டுள்ள டவுண்லோடிங் விண்டோவும், பயர்பாக்ஸ் மற்றும் குரோம் பிரவுசர்களில் உள்ள சிறப்பான அம்சங்களாகும்.
இவை மற்றவர்களுக்கு, மைக்ரோசாப்ட் வழங்காமல் திருட்டுத் தனமாகக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வெளியாகி யிருக்கும் தகவல்களே. சோதனைப் பதிப்பு வரும் போதுதான், இவற்றை நாம் உறுதிப்படுத்த முடியும். எனவே அடுத்த ஆண்டு இதே காலத்தில் இந்த புதிய பிரவுசரின் சோதனைப் பதிப்பிற்காகக் காத்திருப்போம்.
0 comments :
Post a Comment