டொகாமோ தரும் புதிய வகை மொபைல் பிரவுசிங்

மொபைல் சேவை வழங்குவதில், இறுதியாக நுழைந்த டாட்டா டொகோமோ நிறுவனம், பல அதிரடி திட்டங்களுடன் வாடிக்கையாளர்களிடம் பிரபலமாகி வருகிறது.

பேசும் நேரத்திற்கு விநாடிக்குப் பைசா என்று முதன் முதலாக இந்நிறுவனம் திட்டம் கொண்டு வந்து அனைத்து சேவை நிறுவனங்களையும் கலக்கியது. தற்போது மொபைல் இன்டர்நெட் சேவையிலும் புதிய கட்டண வகை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, நாம் பிரவுஸிங் செய்திட விரும்பும், ஒவ்வொரு இணையதளத்திற்குமாக கட்டணம் செலுத்தினால் போதும். ஒரே ஒரு வெப்சைட் மட்டும் பிரவுஸ் செய்திட விரும்புவோர், அதற்கென மாதம் ரூ.10 செலுத்தினால் போதும். இதற்கு 200 எம்பி டேட்டா டவுண்லோட் இலவசம். அதன் பின் ஒவ்வொரு கேபி டேட்டாவிற்கும் ஒரு பைசா செலுத்தினால் போதும்.

பல இணைய தளங்களுப் பார்வையிட விரும்புபவர்கள், மாதம் ரூ.25 செலுத்த வேண்டும். இதற்கு 500 எம்பி டேட்டா இலவசம். ஜிமெயில், யாஹூ மற்றும் ரீடிப் தளங்களில் உள்ள இமெயில் அக்கவுண்ட்களை மட்டும் கையாளலாம்.

அதே போல, பேஸ்புக், ட்விட்டர், லிங்க்டு இன், ஆர்குட் மற்றும் நிம்பஸ் சோஷியல் நெட்வொர்க் தளங்களுக்கு மட்டும் செல்லலாம். சேட் என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு, ஜிடாக், யாஹூ அல்லது நிம்பஸ் ஆகிய தளங்களைப் பயன்படுத்த அனுமதி உண்டு.

தளத்திற்கு மட்டும் காசு என்ற இந்த ஜி.பி.ஆர்.எஸ். திட்டத்தை இயக்க, இதன் வாடிக்கையாளர்கள் *141# என்ற எண்ணுக்கு டயல் செய்திட வேண்டும். அல்லது MY SITE என 141 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும். அல்லது டாட்டா டொகோமோ இணைய தளம் சென்று ஆக்டிவேட் செய்திடலாம்.

இந்த திட்டங்கள் மூலம், இந்நிறுவனச் சந்தாதாரர்கள், தாங்கள் விரும்பும் தளங்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்திப் பணத்தை மிச்சப்படுத்த முடியும். இது நன்மையாக இருந்தாலும், இணையத் தேடலை இது சுருக்கிவிடும் என்றும், உண்மையான இணையப் பயன்பாடு இதனால் குறைந்துவிடும் என்றும் சிலர் கருதுகின்றனர்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes