ஏறத்தாழ ஒராண்டுக்கு முன், கூகுள் வேவ் என்னும் ஒரு வசதியை இலவசமாகத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்தது. மக்கள் தொடர்பினை மேற்கொள்வதில், இது ஒரு புதிய மாற்றத்தையும், அதிக வசதியையும் தரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மக்கள் இதன் முழு பரிமாணத்தினையும் புரிந்துகொள்ளும் வகையில், கூகுள் தரவில்லை. இதனால், உடனே கூகுள் வேவ் வசதியைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள், உடனே பின் வாங்கினார்கள். இவர்களின் கருத்துக்களைக் கேட்டவர்கள், அதன் செயல்பாடு என்ன என்று அறியாமலேயே, அதனைத் தொடப் பயந்தனர். விளைவு?
அதிக வாடிக்கையாளர்கள் இல்லாததால், கூகுள் இந்த வசதியை மூடிவிட்டது. கூகுள் எதிர்பார்த்தபடி, இது பயன்படுத்தப்படாததால், இந்த வசதி மூடப்பட்டது என இப்பிரிவின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
(காண்க: http://googleblog.blogspot.com/2010/08/updateongooglewave.html)"எது மிகக் கடினமோ, அதனைத் தயாரித்து வழங்கு. அது வெற்றி அடையவில்லையா, பாடமாக அதனை எடுத்துக் கொள். தோல்விகளையும் கொண்டாடு; அதுதான் கூகுள்' என இந்நிறுவன அறிவிப்பு கூறுகிறது.
இதற்கு முன் இதே போல பல கூகுள் திட்டங்கள் மக்கள் ஆதரவின்றி தோல்வி அடைந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவற்றில் சில : Google Health, Google Dodgeball, Google Notebook மற்றும் Google Lively.
0 comments :
Post a Comment