இணையத்தில் சென்ற போது, RIOT – Radical Image Optimization Tool என்று ஒரு புரோகிராம் கண்ணில்பட்டது. வாசகரின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் செயல்படும் புரோகிராமாக இது வடிவமைக்கப் பட்டிருந்தது இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது.
இதன் மூலம் ஒரு இமேஜை சுருக்கிப் பதிந்து வைக்கலாம். எந்த அளவில் சுருக்கினால் எப்படி இருக்கும் என்று முன் கூட்டியே பார்த்து, அந்த அளவில் சுருக்கி வைக்கலாம்.
இந்த புரோகிராமினை இலவசமாக டவுண்லோட் செய்திட http://luci.criosweb.ro/riot/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
இதற்கான பைல் 1 எம்பிக்கும் குறைவாக இருப்பதால், ஒரு நிமிடத்தில் இதனை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திடலாம். டவுண்லோட் ஆகும்போது ஸிப் பைலாக இது கிடைக்கும். விரித்து செட் அப் பைலில் கிளிக் செய்து இன்ஸ்டால் செய்திடலாம்.
இன்ஸ்டலேஷன் முடிந்தவுடன், இமேஜ் பைலைச் சுருக்கும் வேலையைத் தொடங்கலாம். இந்த புரோகிராமினை இயக்கி, சுருக்க வேண்டிய இமேஜ் பைலை அதன் விண்டோவில் இழுத்துவிட வேண்டும்.
இதன் பின்னர் இந்த ரயட் புரோகிராம், இரண்டு பிரிவுகளைக் காட்டும். இடதுபுறத்தில் ஒரிஜினல் இமேஜும், வலதுபுறத்தில் கம்ப்ரஸ் ஆகும் இமேஜும் காட்டப்படும். எந்த அளவிற்குச் சுருக்கப்பட வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கலாம்.
75% ல் தொடங்கி, பின் சுருக்கப்படும் இமேஜின் தன்மையைப் பார்த்தவாறே, சுருக்கப்படும் அளவை அதிகப்படுத்தலாம். பைல் அளவு சுருங்கினாலும், படத்தின் தன்மை மாறாமல் இருப்பதனைப் பார்க்கலாம். 200 கேபி அளவிற்குச் சுருக்கப்பட்ட பைல் கூட, இமேஜை மிகத் தெளிவாகக் காட்டியது. இமேஜ் பைலைச் சுருக்குவதற்கான மிக திறன் கொண்ட புரோகிராமாக இது உள்ளது.
0 comments :
Post a Comment