ஷாருக்கான்-கஜோல் நடிப்பில் சூப்பர் ஹிட் கொடுத்த பாலிவுட் படமான மை நேம் இஸ் கான் திரைப்படம் அமெரிக்காவை தொடர்ந்து பிரிட்டனிலும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் ஆகியுள்ளது.
இப்படம் பிரிட்டனில் மட்டும் 2.5 மில்லியன் பவுண்டுகளை(17 கோடி 25 லட்சம் ரூபாய்) வசூலில் அள்ளிக் குவித்துள்ளது. இப்படத்தின் இயக்குனர் கரண் ஜோகர் ஆவார். இவர் இயக்கிய கபி குஷி கபி கம் படமும் 2001ம் ஆண்டு பிரிட்டனில் வசூலை அள்ளிக் குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் மை நேம் இஸ் கான் படம் இந்த அளவிற்கு ஹிட் ஆகும் என எதிர்பார்க்கவில்லை எனவும், தனது முந்தைய படத்தின் சாதனையையும் இது முறியடித்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிப்பதாகவும் படத்தின் டைரக்டர் கரண் ஜோகர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் நம்பர் 1 இடம் பிடித்துள்ள ஒரே பாலிவுட் படம் மை நேம் இஸ் கான் என்பது பெருமைபடும் விஷயமாக உள்ளது என படத்தை தயாரித்த ஃபாக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
0 comments :
Post a Comment