அஜித் - விஜய் - விக்ரம் இணைந்தால்...?!

கோலிவுட் ஹீரோக்களைப் போல பாலிவுட் ஹீரோக்கள் ஈகோ பார்ப்பதில்லை என்று சொல்வதுண்டு. அவ்வப்போது முன்னணி ஹீரோக்கள் சேர்ந்து நடித்து வெற்றிப்படங்களை கொடுக்கும் வரலாறுகளும் நடந்து கொண்டேத்தான் இருக்கிறது.

கோலிவுட்டில் ஒரு ஹீரோ, ஒன்பது ஹீரோயின் என்பது போன்ற கதைகள்தான் வரும். 2 ஹீரோ சப்ஜெக்ட் என்றால் பல முன்னணி நாயகர்களும் தலைதெரிக்க ஓட்டம் பிடித்து விடுவார்கள்.

சரி... விஷயத்துக்கு வருவோம். சமீபத்தில் இந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படம் பாலிவுட்டில் சக்கை போடு போட்டு வசூலை வாரி குவித்துள்ளது. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீ-மேக் செய்யும் உரிமையை ஜெமினி பிலிம் சர்க்யூட் வாங்கியிருக்கிறதாம்.

3 இடியட்ஸ் தமிழில் உருவாகவிருப்பது குறித்து ஒரிஜினல் 3 இடியட்ஸ் படத்தில் மூவரில் ஒருவராக நடித்த மாதவன் கூறுகையில், ஒரு அருமையான படம் தமிழில் உருவாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்த படத்தில் தமிழில் உருவாக்கும்பட்சத்தில் அதில் அஜித், விஜய், விக்ரம் ஆகிய 3 பேரும் சேர்ந்து நடித்தால் கண்டிப்பாக பாலிவுட்டை மிஞ்சும் அளவுக்கு சூப்பர் ஹிட் ஆகும், என்றார்.


0 comments :

Post a Comment

Related Posts with Thumbnails
 
Home | About | Link | Link
Simple Proff Blogger Template Created By Herro | Inspiring By Busy Bee Woo Themes