உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்றுவதற்காக, இரு ஆண்டுகளுக்கு முன், அரசின் '108' இலவச ஆம்புலன்ஸ் சேவை துவக்கப்பட்டது.அரசு உத்தரவுப்படி இறந்தவரை இந்த ஆம்புலன்சில் கொண்டு செல்ல இயலாது. '108'க்கு போன் செய்தால், அழைப்பு சென்னை மையத்திற்கு செல்லும். அங்குள்ளவர்கள், வேண்டிய விபரங்களை பெற்று, அதிகபட்சம் 20 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் வர ஏற்பாடு செய்வர். அதேசமயம், 'ஆம்புலன்ஸ் தாமதமாக வருகிறது' என்ற குற்றச்சாட்டு அவ்வப்போது எழுகிறது. ''இதற்கு பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதில் உள்ள குழப்பம்தான் காரணம்'' என்கிறார் இச்சேவையை பராமரிக்கும் இ.எம்.ஆர்.ஐ., நிறுவனத்தின் மதுரை மேலாளர் தணிகைவேல் முருகன். அவர் கூறியதாவது: '108'க்கு போன் செய்யும் போது, மறுமுனையில் 'அழைப்பிற்கான காரணம் என்ன, எந்த மாவட்டம், தாலுகா, கிராமம், முகவரி, எளிதில் அறியும்படியான இடத்தின் அடையாளம் என்ன' என்பது குறித்து கேட்பர். இந்த விபரங்களை தெளிவாக தெரிவிப்பதோடு, மொபைல் போன் எண்ணையும் கொடுத்தால், ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேரும். சம்பவ இடத்திற்கு வரும்போது, 'எந்த வழியில் செல்வது' என்ற குழப்பம் ஏற்பட்டால், தகவல் தெரிவித்தவரின் மொபைல் போனுக்கு, ஆம்புலன்ஸ் டிரைவர் தொடர்பு கொள்வார். மேலும், சாலை விபத்து என்றால், 'எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என்பது குறித்தும் கேட்பர். காரணம், அதிகம் பேர் என்றால், அருகில் உள்ள ஆம்புலன்ஸ்களை அனுப்புவர். இதுபோன்ற காரணங்களாலும், போக்குவரத்து நெரிசலாலும் ஆம்புலன்ஸ் வந்துசேருவதில் தாமதம் ஏற்படலாம் என்றார்
'108' இலவச ஆம்புலன்சை அழைப்பவரா நீங்கள்
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment